வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் உடல் சோர்வு, வயிற்று வலி என்று கூறப்பட்டது. நேற்று காலை தலைமை செயலகத்தில் முத்தான திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மதியம் 1.30 மணியளவில் வீடு திரும்பின்னர். பின்னர் 3 மணியளவில் உடல் சோர்வாக உணர்ந்துள்ளார். மேலும் வழக்கமான மருத்துவ பரிசோதனையும் செய்ய வேண்டி இருந்ததால் நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடல் தொடர்பான சோதனைகள் எடுக்கப்படும் என்றும் சிகிச்சை நிறைவடைந்த பின் அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
தென் மாவட்டங்களில் 3 மணிநேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வழக்கமான உடல் பரிசோதனைக்காக முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் அவர் இன்று வீடு திரும்புவார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே அமைச்சர் துரை முருகன், எம்.பிக்கள் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர், முதலமைச்சர் வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.