இறுதி கட்டத்தில் குடியரசுத்தலைவர் தேர்தல்..! தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் வாக்கு மதிப்பு எவ்வளவு..?

Published : Jul 17, 2022, 11:07 AM ISTUpdated : Jul 17, 2022, 11:09 AM IST
இறுதி கட்டத்தில் குடியரசுத்தலைவர் தேர்தல்..! தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் வாக்கு மதிப்பு எவ்வளவு..?

சுருக்கம்

குடியரசுத்தலைவர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் வாக்கு மதிப்பு எவ்வளவு என்கிற விவரம் வெளியாகியுள்ளது.  

திமுகவின் வாக்கு மதிப்பு..?

15 வது குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா களம் இறக்கபட்டுள்ளார்.  குடியரசு தலைவர் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்தையும் பொறுத்து எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு மாறுபடும். மாநிலங்களவை எம்பி, மக்களவை எம்.பிக்களின் வாக்குகளின் மதிப்பு மாறாது. தேர்தலில், எம்.பிக்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,43,200,  எம்எல்ஏக்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,43,231. மொத்தமாக 10,86,431 ஆகும். மொத்த வாக்கு மதிப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுபவரே குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். தேசிய ஜனநாயக கூட்டணியின் மொத்த வாக்கு மதிப்பு 5,25,893. அதாவது 48.67 சதவீத வாக்குகளை கைவசம் தேசிய ஜனநாயக கூட்டணி  தன்வசம் வைத்துள்ளது. மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு மாறுபடும். இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 208. தமிழ்நாட்டில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 176. தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு 41,184 ஆக உள்ளது.

ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சா..? அப்போ... திமுக அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி..! ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அதிமுக

குடியரசு துணை தலைவர் தேர்தல்.. பாஜக வேட்பாளர் அறிவிப்பு


அதிமுக வாக்கு மதிப்பு

இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிகளின் மொத்த வாக்கு மதிப்பு 76,378. மொத்த வாக்கு மதிப்பான 76,378-ல் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் வாக்கு மதிப்பு 62,884 ஆக உள்ளது. 133 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 34 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட திமுகவிற்கு மட்டும் 47,208 வாக்குகள் உள்ளன.காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 18 எம்.எல்.ஏக்கள் மற்றும் 8 எம்.பிக்கள் உள்ளனர் எனவே  அக்கட்சியின் வாக்கு மதிப்பு 9,468 ஆக உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2,104 வாக்குகளும் . கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு  3,504 வாக்குகளும், ம.தி.மு.க 700 வாக்குகளையும் கொண்டுள்ளது. இதே போல  அதிமுகவிற்கு 66 எம்.எல்.ஏக்களும், 5 எம்.பிக்களும் உள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் மொத்த வாக்கு மதிப்பு 15,116 ஆக உள்ளது. ஆனால் தற்போது அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகிய 3 சட்டமன்ற உறுப்பினர்களும், தேனி நாடாளுமன்ற உறுப்பினரான ரவிந்திரநாத்தும் நீக்கப்பட்டதால் அதிமுகவின் மொத்த வாக்கு மதிப்பு குறைந்துள்ளது. இருந்த போதும் இந்த 4 பேரும் திரவுபதி முர்முவிற்கு வாக்களிக்கவுள்ளனர். 

இதையும் படியுங்கள்

மு.க.ஸ்டாலின் இல்லாமல் திமுக MLA கூட்டம்.! ஓபிஎஸ்சை நீக்க அதிமுக சட்டமன்ற கூட்டத்தில் முடிவு .? பரபரப்பு தகவல்

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
திமுக முக்கிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இவர்கள் தான்! எவ்வளவு சவரன் நகை? வெளியான அதிர்ச்சி தகவல்!