முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி நினைவிடம் நாளை திறக்கப்படவுள்ள நிலையில், தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் நினைவிட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது
மெரினாவில் கலைஞருக்கு நினைவிடம்
தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராகவும், தான் சந்தித்த தேர்தலில் தோல்வியை சந்திக்காதவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி வயது முதிர்வு மற்றும் உடல் நிலை பாதிப்பு காரணமாக காலமானார். இதனையடுத்து நடைபெற்ற சட்ட போராட்டத்திற்கு பிறகு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள அண்ணா நினைவிடம் அருகில் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
undefined
2.21 ஏக்கரில் நினைவிடம்
இதற்கான பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது கட்டிட பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து நாளை மாலை 7 மணிக்கு கலைஞர் கருணாநிதி நினைவிடம் திறக்கப்படவுள்ளது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
39 கோடியில் நினைவிடம்
இந்த நினைவிட பகுதியில் கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பில் கருணாநிதி நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி சதுக்கத்தின் கீழே நிலவறைப் பகுதியில், “கலைஞர் உலகம்” எனும் பெயரில் ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
புகைப்பட தொகுப்பு
கருணாநிதியின் எழிலோவியங்கள் எனும் அறையில், கருணாநிதியின் இளமைக் காலம் முதல் அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், படைப்புகள், போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. உரிமைப் போராளி கலைஞர், அரசியல் கலை அறிஞர் கலைஞர், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் என தனித்தனி அறைகளில் கருணாநிதி பெருமை மற்றும் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் புகைப்பட தொகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்