"நண்பாஸ் நான் பின்னாலே வரேன்".. மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட ஆடுகள் - பாச போராட்டம் நடத்திய நாய்!

Ansgar R |  
Published : Feb 24, 2024, 10:58 PM IST
"நண்பாஸ் நான் பின்னாலே வரேன்".. மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட ஆடுகள் - பாச போராட்டம் நடத்திய நாய்!

சுருக்கம்

Erode : தன்னுடன் இணைந்து வளர்ந்த ஆடுகளை மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது, அவற்றுடன் சேர்ந்து வாழ்ந்த நாய் ஒன்று நடத்திய பாசப்போராட்டம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதி சேர்ந்தவர் தான் மாதேஸ்வரன், இவர் ஒரு விவசாய கூலி தொழிலாளர். இவரது வீட்டின் வெளியே பட்டி போட்டு 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் "பப்பி" என்ற நாய் ஓன்றையும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் வளர்த்து வருகிறார். ஆடுகளும், அந்த பப்பி என்ற நாயும் ஓன்றாகவே நட்புடன் வளர்ந்து வந்துள்ளது. 

ஆடுகளை மேய்சலுக்கு அழைத்து செலும் போதும் நாய் பப்பியும் உடன் செல்வதுடன், அந்த ஆடுகளுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து பாசமாக வளர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் மாதேஸ்வரனின் ஆடுகள் சில உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், உணவு சரியாக உட்கொள்ளமல் சப்தம் எழுப்பியபடியே இருந்து வந்ததை தொடர்ந்து சரக்கு வாகனம் மூலமாக ஆடுகளை ஏற்றி கொண்டு ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். 

கடற்கரை முதல் தாம்பரம் வரை.. 44 மின்சார ரயில்கள் ரத்து.. ஆனால் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் - முழு விவரம்!

அப்போது அந்த ஆடுகளை விட்டு பிரிய மனம் இல்லாத பப்பி நாய், தானும் சரக்கு வாகனத்தில் ஏற மமுயற்சித்துள்ளது. உள்ளது. ஆனால் பப்பி நாயை ஏற்றாமல் ஆடுகளை மட்டும் ஏற்றி கொண்டு சரக்கு வாகனத்தில் புறப்பட்டு உள்ளார் அதன் உரிமையாளர். ஆனால் ஒன்றாக பாசத்துடன் வளர்ந்த அந்த நாய் ஆடுகளை பிரிய மனம் இல்லாமல் சரக்கு வாகனத்தின் பின்னாலயே சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்றுள்ளது. 

இதனைக் கண்ட பொதுமக்களில் ஒருவர் ஆடுகளை ஏற்றுச் சென்ற வாகனத்தை, நாய் ஒன்று பின் தொடர்வதை தனது செல்போன் மூலமாக வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ஆடுகளை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பின்பு மீண்டும் மாதேஸ்வரன் ஆடுகளை சரக்கு வாகனத்தில் ஏற்றி மீண்டும் தனது இருப்பிடத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

 

அப்போதும் கால்நடை மருத்துவமனையில் இருந்து பப்பி என்ற நாய் ஆடுகளை ஏற்றி சென்ற வாகனத்தின் பின்பாகவே மீண்டும் 3 கிலோமீட்டர் தூரம் வாகனத்தின் பின்னாலே வந்து வீட்டிற்கு சேர்ந்து உள்ளது. ஆடுகளைப் பிரிய மனமில்லாமல் ஒன்றாக வளர்ந்த நாய் நடத்திய பாச போராட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

போயஸ் கார்டன்.. சசிகலா கட்டிய புது வீடு - மனைவியுடன் நேரில் சென்று வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

PREV
click me!

Recommended Stories

வேலைக்கு போற அவசரத்துல இதை மறந்துடாதீங்க! தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!
Tamil News Live Updates 07 December 2025: கருப்பு - தங்க நிறத்தில் மின்னும் ஸ்பெஷல் RDX எடிஷன்.. டிவிஎஸ் கொடுத்த திடீர் சர்ப்ரைஸ்