போயஸ் கார்டன்.. சசிகலா கட்டிய புது வீடு - மனைவியுடன் நேரில் சென்று வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Ansgar R |  
Published : Feb 24, 2024, 10:16 PM IST
போயஸ் கார்டன்.. சசிகலா கட்டிய புது வீடு - மனைவியுடன் நேரில் சென்று வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சுருக்கம்

Rajinikanth Met Sasikala : சென்னை போயஸ் கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ள சசிகலா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

சென்னை போயஸ் கார்டன் என்றாலே சட்டென்று மக்களின் நினைவில் முதலில் வருவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவும் தான் என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் போயஸ் கார்டனில் "ஜெயலலிதா இல்லம்" என்ற பெயரில் சசிகலா அவர்கள் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். 

இந்த வீட்டிற்கான கிரகப்பிரவேச நிகழ்வு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் தற்போது அவரது வீட்டிற்கு நேரில் தனது மனைவியோடு சென்று தனது வாழ்த்துக்களை பூங்கொத்து கொடுத்து பகிர்ந்துள்ளார் தமிழ் சினிமாவின் மூத்த பிரபல நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். முன்னாள் முதல்வரான செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி காலமானார். 

90களில் உச்சத்தில் இருந்த பிரபல நடிகை.. தயாரிப்பாளராக ஆசைப்பட்டு கடனில் மூழ்கி வீட்டை விற்ற சோகம்..

2016 ஆம் ஆண்டு அவருடைய மறைவுக்கு பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து அவர்கள் அனைவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். 

சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து சசிகலா சிறையில் இருந்து விடுதலை பெற்றார். அதன் பிறகு தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தான் சசிகலா தங்கி இருந்தார். அங்கு இருந்தபடியே போயஸ் கார்டனில் இந்த புதிய வீட்டை அவர் கட்டி முடித்தார். கடந்த மாதம் இந்த வீட்டிற்கான கிரகப்பிரவேசம் நடந்து முடிந்த நிலையில் சசிகலாவிற்கு மிக நெருக்கமான உறவினர்கள் மட்டுமே இதில் பங்கேற்றனர். 

சுமார் 24 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த இல்லத்தில் வசித்து வரும் சசிகலாவை இன்று பிப்ரவரி 24ம் தேதி நேரில் சென்று வாழ்த்தியுள்ளனர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்.

"உங்க அண்ணனை நல்லாவே வாழ விடமாட்டீங்களா?" நம் தமிழர் கட்சியினரை சாடும் விஜயலக்ஷ்மி - சர்ச்சையை கிளப்பும் Video!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!