இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டீரியர் டிசைனர்ஸின்(IIID)வெள்ளிவிழா கொண்டாட்டத்தையொட்டி கலை இயக்குனர் பத்மஶ்ரீ தோட்டாதரணியின் கலைப்படைப்புகள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் ஓவிய கண்காட்சி
சினிமா செட் வடிவமைப்பு மற்றும் கட்டிடக்கலை சுவரோவியங்களில், சென்னையை தாண்டி அகில இந்திய அளவில் ஒரு அழியாத முத்திரையை பதித்தவர் தோட்டா தரணி, இவரது கலை படைப்புகள் கண்காட்சியாக சென்னையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டீரியர் டிசைனர்ஸ் (IIID) வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் தொடர்பான வணிக நிறுவனத்தின் வெள்ளி விழாவையொட்டி நிகழ்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பிரபல கலை இயக்குனரான தோட்டா தரணியின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு வண்ணங்களின் கலவை முதல் மோனோக்ரோம் வரையிலான நிறங்களின் தனித்துவமான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
undefined
தோட்டா தரணியின் ஓவியகண்காட்சி
தோட்டாதரணியின் திறமையை எடுத்துக்காட்டும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு தலைமுறை அனுபவங்களைக் கொண்ட தோட்டா தரணி கலை படைப்பு இளைஞர்களுக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது. இந்த கண்காட்சி தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக IIID- CRC தலைவர் ரவி,IIID- CRC கௌரவ செயலாளர் தர்மேஷ் மேத்தா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த கண்காட்சி பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 3 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் எனவும் இதற்கு அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்