கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் என்னென்ன? தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டும் திமுக - லேட்டஸ்ட் தகவல்!

By Ansgar R  |  First Published Feb 24, 2024, 9:05 PM IST

Lok Sabha Election 2024 : மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட மூன்று முக்கிய கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.


இதனையடுத்து மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகளுடன் இன்று பிப்ரவரி 24ஆம் தேதி இறுதி கட்ட தொகுதி பங்கிட்டு பேச்சுவார்த்தையில் திமுக ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொகுதி பங்கிட்டு முடிவுகள் அனைத்தும் இன்றே வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் காதர் மொய்தீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியில் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் மீண்டும் நவாஸ் கனி "ஏணி" சின்னத்தில் போட்டியிடுவார் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக கூறியிருக்கிறது. 

Tap to resize

Latest Videos

தமிழகத்தில் தற்போது நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சி அல்ல ஹிட்லர் மாடல் ஆட்சி - டிடிவி தினகரன் விமர்சனம்

அதேபோல நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும், விரைவில் அங்கு போட்டியிட உள்ள வேட்பாளர் குறித்த தகவல்களை, செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு அறிவிப்போம் என்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

இறுதியாக திமுக கூட்டணியில் 6 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசிக, சிபிஎம், சிபிஐ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவையின் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிவருகின்றது. 

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து; சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழப்பு!

click me!