சேலத்தில் சயனைடு கலந்த மதுவை குடித்த நபர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம் மக்கான் தெருவை சேர்ந்த சதாம் மற்றும் அவரது நண்பர் அசேன் இருவரும் சேலம் முள்ளுவாடிகேட் பகுதியில் உள்ள அரசு மதுபான பாரில் மது அருந்திவிட்டு வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்துள்ளனர். அப்போது அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில் இருவரும் சயனைடு கலந்த மதுவை அருந்தியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சதாமின் சகோதரர் ஜசிர்உசேன் வெள்ளி கூலித்தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மதுபாட்டிலில் சயனைடு கலந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து மதுவில் சயனைடு கலந்து வீட்டில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்த நபர் கவலைக்கிடம்
அதனை சதாம் எடுத்துக்கொண்டு அவருடைய நண்பர் அசேன் என்பவரை அழைத்துகொண்டு மதுபான பாரில் மது அருந்தியது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சயனைடு கலந்த மதுவை குடித்த இருவர் கவலைக்கிடமான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அசேன் என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சதாம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.