சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரட்டை குழந்தைகளுடன் தம்பதியர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், ஜாகிர் சின்னம்மாபாளையம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இவர்களுக்கு கடந்த 24 ஆண்டுகள் கழித்து தற்போது இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த நிலையில் இவர் தனது மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அருகில் இருந்த காவலர்கள் அவரிடமிருந்த மன்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி தற்கொலை முயற்சியை தடுத்தனர். இதுகுறித்து சேட்டு கூறும் பொழுது, ஜாகித் சின்னம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், அவரது மனைவி பரிமளா மற்றும் தாயார் பழனியம்மாள் ஆகியோர் கல்யாணசுந்தரம் காலனியில் உள்ள வீட்டினை கடந்த 2020 ஆம் ஆண்டு விற்பனை செய்வதாக கூறினர்.
undefined
அதனை ரூபாய் 7 லட்சம் கொடுத்து நோட்டரி பப்ளிக் முன்னிலையில் வாங்கினோம். மூன்று மாத கால அவகாசத்திற்குள் கிரயம் செய்து வைப்பதாக கூறினர். ஆனால் இது நாள் வரை கிரயம் செய்து கொடுக்க மறுத்து வருகின்றனர். இதுகுறித்து கேட்ட பொழுது நாங்கள் வாங்கிய பணத்தை திருப்பி தருகிறோம் வீட்டை மீண்டும் எங்களுக்கு எழுதிக் கொடுத்து விடுமாறு கடந்த 10 ஆம் தேதி கார்த்திகேயன், பரிமளா, பழனியம்மாள் பவிஸ்ரீ ஆகியோர் எங்கள் வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுகின்றனர்.
மேலும் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களுடைய சொத்தினை மீட்டு தரும்படியும்,கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். இரட்டை கைக்குழந்தைகளுடன் தம்பதியினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.