விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து; சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழப்பு

By Velmurugan s  |  First Published Feb 24, 2024, 6:55 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியில் ரவீந்திரா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியில் சிவகாசியைச் சேர்ந்த கதிரேசன் என்பவருக்கு சொந்தமான ரவீந்திரா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை நாக்பூர் உரிமம் கொண்டது என கூறப்படுகிறது. இந்த ஆலையில் அறுபதுக்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிக்கும் அறைகள் உள்ளன.

தமிழகத்தில் தற்போது நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சி அல்ல ஹிட்லர் மாடல் ஆட்சி - டிடிவி தினகரன் விமர்சனம்

Tap to resize

Latest Videos

undefined

மேலும் இன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பட்டாசுக்கு மருந்து செலுத்தும் போது ஏற்பட்ட விபத்தில் சிவகாசி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்ற (வயது 21) இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பாக தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர், சாத்தூர் நகர காவல் துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் அரசியலை விட்டே விலகிவிடுவேன் - எம்.பி.மாணிக்கம் தாகூர் சவால்

சம்பவ இடத்தில் சாத்தூர் தாசில்தார், வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இதே மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு வெடி விபத்து நடைபெற்றிருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!