ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்த நபர் கவலைக்கிடம்

Published : Feb 24, 2024, 04:47 PM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்த நபர் கவலைக்கிடம்

சுருக்கம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த நபர் தீக்குளித்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற  வளாகத்தில் கோவில்பட்டி மந்திதோப்பு எம்.கே.டி நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் (வயது 45) என்பவர் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து கொண்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சந்திரசேகர் உடலில் பற்றி எரிந்த தீயை அனைத்து அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரசேகர் உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வருகிறார்.

கணவரின் ஓரினச்சேர்க்கையால் ஒரே மாத்தில் முடிவுக்கு வந்த இல்லற வாழ்க்கை; கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். எதற்காக நீதிமன்றம் வந்தார்? எதற்காக தீ வைத்துக் கொண்டார் என்று நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தொட்டியில் தண்ணீரை பார்த்ததும் குடும்பத்துடன் கும்மாளம் போடும் காட்டு யானைகள்

காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில், விருதுநகர் மேற்கு காவல்நிலையத்தில் அவர் மீது ஒரு வழக்கு உள்ளதாகவும், கோவில்பட்டியில் ஒரு வழக்கு உள்ளதாகவும் மொத்தம் அவர் மீது மூன்று வழக்குகள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீவைத்து கொண்ட இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

கிளிமஞ்சாரோ சிகரத்தில் தமிழக சிறுவர்களின் இமாலய சாதனை! ரூ.1,00,000-ஐ அள்ளிக்க கொடுத்த நயினார் பாலாஜி! என்ன காரணம்?
இந்த சோகத்துக்கு ஒரு முடிவே இல்லையா? வெடி விபத்தில் தூள் தூளாக சிதறிய பட்டாசு ஆலை! 4 பேர் பலி!