விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்துக்கு மனித தவறே காரணம்; ஆட்சியர் பேட்டி

By Velmurugan sFirst Published Feb 17, 2024, 5:21 PM IST
Highlights

சிவகாசி அருகே பட்டாசு ஆலைவெடி விபத்தில் 10 பேர் பலி;முதற்கட்ட விசாரணையில் விபத்திற்கு மனித தவறே காரணம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேட்டி

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடந்த பட்டாசு ஆலையை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், மதுரை சரக டி.ஐ.ஜி ரம்யா பாரதி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில்  பார்வையிட்டனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், இன்று மதியம் 12.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது. இந்த ஆலையின் உரிமம் முறையாக பெற்று நடைமுறையில் தான் உள்ளது. ஒரே அறையில் விதியை மீறி 8 பேர் வேலை பார்த்தாக விசாரணையில் தெரிய வருகிறது. எனவே முதல்கட்ட விசாரணையில் விபத்திற்கு மனித தவறே காரணம் என தெரிய வருகிறது.

உங்களால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? அண்ணாமலைக்கு துரைவைகோ சவால்

மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனே விபத்து ஏற்படாமல் இருக்க போலீஸ், தீயணைப்பு, தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களும் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

எங்கள் கட்சியில் சண்டையும் இல்லை, சச்சரவும் இல்லை - கார்த்திக் சிதம்பரம் விளக்கம்

இதனிடையே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

click me!