ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பல்கலைக்கழக விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவன், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவிலில் தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் வெளியூர், வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். அந்த வகையில் ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் மாவட்டம், நரசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரப்பா என்பவரது மகன் மஞ்சுநாத்(வயது 20) பல்கலைக்கழக விடுதியில் தங்கி பி.டெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற மஞ்சுநாத் இன்று காலை கல்லூரிக்கு வந்துள்ளார். பின்னர் தனது விடுதி அறையில் மஞ்சுநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
undefined
அதேபோல் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் வடிகபள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரது மகள் கௌகிவாலி பள்ளி அகிலா(19). இவர் விடுதியில் தங்கி இருந்து பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு நடந்துகொண்ட விதம் தவறு - தமிழிசை காட்டம்
இதுகுறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணன் கோயில் காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிருஷ்ணன்கோவில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது கல்லூரி மாணவர்கள் இடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.