8 வருட தனிமை காரணமாக மனைவிக்கு சிலை ஒன்றை வைத்துள்ளார் கணவர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நேஷனல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு கடந்த 1968 ஆம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு தற்போது ஆனந்த், அம்சா, அமிர்த பானு, பாபு என்ற நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில் அனைவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் முடிந்துவிட்டது.
இந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் தற்போது குழந்தைகள் உள்ளன. நாராயணன் முன்னதாக அச்சகம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்த நிலையில் காலக்கோட்டில் சொந்தமாக அச்சகம் ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். தற்போது அவர் வயது முதிர்வு காரணமாக ஓய்வில் உள்ளார்.
undefined
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி ஈஸ்வரி அவரது 65 வயதில் சர்க்கரை நோயால் திடீரென உயிரிழந்து விட்டார். தன் மீது அதிகம் பாசம் வைத்திருந்த மனைவி உயிரிழந்ததை நாராயணா தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தனது மனைவியின் உருவ சிலையை தயார் செய்ய வேண்டும் என்று நினைத்து, மார்பளவு சிலையை செய்ய ஆர்டர் கொடுத்தார். மனைவியின் நினைவு தன்னுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக 9 லட்சம் ரூபாய் செலவில் இந்த சிலையை செய்துள்ளதாகவும், அவர் உயிருடன் இருப்பது போன்ற மன நிறைவு தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் நாராயணன் தெரிவித்து உள்ளார்.
மாலத்தீவை விடுங்க பாஸ்.. நம்ம அந்தமானை கம்மி விலையில் சுற்றி பாருங்க! டிக்கெட் விலை கம்மிதான்!