சுய உதவிக் குழுக்களுக்கு குட்நியூஸ்: உதயநிதி தலைமையில் பெண்களுக்கு நலத்திட்டங்கள்!

Published : Aug 13, 2023, 11:53 AM IST
சுய உதவிக் குழுக்களுக்கு  குட்நியூஸ்: உதயநிதி தலைமையில் பெண்களுக்கு நலத்திட்டங்கள்!

சுருக்கம்

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு  நலத்திட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்,  தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நகர்ப்புர சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில்  வங்கிக் கடன் இணைப்பு, நகர்ப்புர சாலையோர வியாபாரிகளுக்கு உணவுத்தரச் சான்றிதழ்,  திறன் பயிற்சி பெற்ற  இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் /  பணி நியமன ஆணைகள், சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த சிறு தொழில் முனைவோர்களுக்கு  கடனுதவிகள், நகர்ப்புர சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில்  வங்கிக் கடன் வழங்கிய  வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும்  தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா 14.08.2023 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் மகளிரின் முன்னேற்றத்திற்காக,  1989ஆம் ஆண்டு முதன்முறையாக தருமபுரி மாவட்டத்தில் துவங்கப்பட்ட மகளிர் திட்டம் இன்று  தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு சுய உதவிக் குழுக்கள் மற்றும் இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில்களைத் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது. 

இந்தியாவின் முதல் 5 பணக்கார மாநிலங்கள்: தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?

மகளிரின் முன்னேற்றத்திற்கான அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கமான தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் நகர்ப்புரங்களில் சுய உதவிக் குழு இயக்கத்தின் வளர்ச்சிக்காக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ் நகர்ப்புரங்களில் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் அமைக்கப்பட்டு, அவற்றின் உறுப்பினர்களுக்கு தொழிற்பயிற்சிகள், வங்கிக் கடன் இணைப்புகள், சுய தொழில் வாய்ப்புகள் போன்றவை உருவாக்கித் தரப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நகர்ப்புர சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில்  வங்கிக் கடன் இணைப்பு, நகர்ப்புர சாலையோர வியாபாரிகளுக்கு உணவுத்தரச் சான்றிதழ்,  திறன் பயிற்சி பெற்ற  இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் /  பணி நியமன ஆணைகள், சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த சிறு தொழில் முனைவோர்களுக்கு  கடனுதவிகள், நகர்ப்புர சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில்  வங்கிக் கடன் வழங்கிய  வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும்  தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 18ஆம் தேதி (நாளை) வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!