4 மணி நேரம் கும்மியாட்டம்: உலக சாதனை படைத்த உடுமலை பெண்கள்!

By Manikanda PrabuFirst Published Aug 13, 2023, 11:44 AM IST
Highlights

உடுமலை அருகே மலையாண்டி கவுண்டன் புதூரில் 2000 பெண்கள் நாண்கு மணிநேரம் வள்ளி கும்மியாட்டம் ஆடி உலக சாதனை படைத்துள்ளனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மலையாண்டி கவுண்டனூரில் 2000 ஆயிரம் பெண்கள் பங்குபெற்று பாரம்பரிய கும்மிபாடல்களுக்கு 4 மணிநேரம்  தொடர்ந்து வள்ளி கும்மியாட்டம் ஆடினர்.

உடலுக்கும் மனதிற்கும் சிறந்த பயிற்சியாகவும், ஒன்று கூடி நடனமாடி உறவுகளை வலுப்படுத்தும் நிகழ்வாகவும் நடத்தபடும் பாரம்பரிய வள்ளி கும்மியாட்டத்தின் சிறப்புகளை அணைவரும் அறிய செய்திடும் நோக்கில்  நடத்தபட்ட வள்ளி கும்மியாட்டத்தில் பெண்கள் ஆர்வமுடன் பங்குபெற்று நடனமாடினர்.

சக்தி கலைக்குழுவின் சார்பாக ஆசிரியர் வலசுபாளையம் மகாலிங்கம் தலைமையில் நடந்த கும்மியாட்டத்தை ட்ரையம்ப்  வேல்ர்ட் ரெக்கார்ட் அமைப்பினர், ட்ரையம்ப்  (triumph)உலகசாதனை புத்தகத்தில் பதிவு செய்து சான்றிதழ் வழங்கினர்.

இந்தியாவின் முதல் 5 பணக்கார மாநிலங்கள்: தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?

இந்த நிகழ்வில் பேரூராதீனம் கொங்கு நாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் மடத்துகுளம் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி எம்.பி.சன்முகசுந்தரம் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

click me!