திருப்பூரில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து; 4 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து - 2 பேர் கவலைக்கிடம்

Published : Aug 12, 2023, 02:38 PM ISTUpdated : Aug 12, 2023, 02:39 PM IST
திருப்பூரில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து; 4 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து - 2 பேர் கவலைக்கிடம்

சுருக்கம்

திருப்பூரில் தாருமாறாக ஓடிய தனியார் பேருந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனம், கார் என அடுத்தடுத்து மோதிய விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை நோக்கி நேற்று மாலை 4.30 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பல்லடம் வழியாக வேகமாக பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பல்லடம் பேருந்து நிலையம் நுழைவுவாயில் அருகே வந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார், பைக் என 4 வாகனங்கள் மீது பேருந்து வேகமாக மோதியதில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர், மேலும் 2 குழந்தைகள்  உள்பட 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் அவ்வழியாக சென்றவர்கள் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கும், பல்லடம் தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். 

செல்போன் கோபுர உச்சியில் ஏறி காரியத்தை சாதித்த வாலிபர்; திருமணத்திற்கு சம்மதம் சொன்ன காதலி

இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் கிடைத்த சி.சி.டிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்து குறித்து பல்லடம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தலை துண்டிக்கப்பட்டு காவல் ஆய்வாளர் படுகொ*ல: அதிமுக MLA தோட்டத்தில் நடந்த பகீர் சம்பவம்
ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை கீழே தள்ளிய கொடூரனுக்கு சாகும் வரை சிறை! நீதிமன்றம் தீர்ப்பு!