
மதுரையில் இருந்து கோவை நோக்கி போர்டு பிகோ காரில் சந்திரன்(வயது 60). அவரது உறவினர்களான கிருபாகரன்(24), சஞ்சய்(24) என மொத்தம் 3 பேர் சென்றுள்ளனர். கிருபாகரன், சஞ்சய் இருவரும் கல்லூரியில் படித்து வந்தனர். இந்நிலையில், கார் தாராபுரம் வழியாக 4 வழிச்சாலையில் கோனாபுரம் பிரிவு னஎ்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த இனோவா சொகுசு காரில் தாராபுரத்தில் விதை பண்ணை நடத்தி வரும் ஆத்துக்கால்புதூரை சேர்ந்த விஜயகுமார் (35) மற்றும் சிவகுமார் (42) ஆகியோர் கோனாபுரம் பிரிவு என்ற இடத்தில் எதிர்நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது இன்னோவா காரின் முன்பக்க டயர் வெடித்து சாலையின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு எதிர் திசையில் சென்று கொண்டிருந்த காரின் மீது திடீரென மோதியது. இதில் இரண்டு கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்தது. இரு கார்களிலும் பயணித்த ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
பேருந்து நிலையத்தில் எல்லை மீறிய இளம் ஜோடி; வீடியோ வெளியாகி பரபரப்பு
காயமடைந்தவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூர் மருத்துவமனைகளுக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் அரசியல் அனாதையாகிவிட்டனர் - கே.பி.முனுசாமி காட்டம்