திருப்பூரில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்; நீதிமன்றம் அதிரடி தண்டனணை

By Velmurugan s  |  First Published Jul 22, 2023, 10:34 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 61 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டம் உடுமலை சுண்டக் கம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 61). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு 8 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் உடுமலை மகளிர் காவல் நிலையத்தில் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tap to resize

Latest Videos

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி முதியவர் ராஜனுக்கு 20 ஆண்டு சிறை தண் டனை, ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

click me!