திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே டீக்கடைக்குள் சிமெண்ட் லாரி புகுந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 3 பேர் பலி, பெண் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே உள்ள சூரியநல்லூர் பகுதியில் கலாமணி என்பவர் சாலையோரம் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை திருச்சியில் இருந்து சிமெண்ட் கலவை லோடு ஏற்றிய லாரியை ரத்தின குமார் என்ற ஓட்டுநர் திருப்பூர் நோக்கி ஓட்டி வந்தார்.
லாரி சூரியநல்லூர் பகுதியில் வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கலாமணியின் டீ கடையில் புகுந்தது. இதில் கடையில் பணியாற்றி வந்த முத்துச்சாமி(வயது 65) மற்றும் டீ அருந்தி கொண்டிருந்த தோழன் (70) என்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திடீரென உதயநிதியின் காரை நோக்கி கைக்குழந்தைகளுடன் ஆவேசமாக பாய்ந்த தம்பதியர்
லாரி ஓட்டுநர் ரத்தின குமார் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். விபத்தில் படுகாயமந்த 5 நபர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குண்டடம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் லாரியை டீ கடையில் இருந்து அகற்ற முயன்று வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
பல்லடம் அருகே விதவைப் பெண்ணை தாக்கி கடையை அடித்து நொருக்க முயன்ற போதை ஆசாமிகள்