விராலிமலையில் உலக சாதனை ஜல்லிக்கட்டு போட்டி !! களத்தில் 2000 காளைகள்… 500 காளையர்கள் !!

By Selvanayagam PFirst Published Jan 20, 2019, 9:48 AM IST
Highlights

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக ஜல்லிக்கட்டு போட்டி  தொடங்கியுள்ளது. . 2000 -காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர்  பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மதுரை  அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் என உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது உலக சாதனையாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 2000 காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு தொடங்கியுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டில் 500 மாடு பிடி வீரர்கள் களம் இறங்க உள்ளனர். இவர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு வழங்குவதற்காக 2 கார்கள், 9 மோட்டார் சைக்கிள்கள், 700 சைக்கிள்கள், தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள், கட்டில்கள், பீரோக்கள் என ஏராளமான பரிசுப் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டை 20,000 பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர் மாடங்கள் அமைக்கப்பட் டுள்ளன.

இதுதவிர, காயமடைந்தோருக்கு உயர் சிகிச்சை அளிப் பதற்காக விராலிமலை அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு வரலாற்றிலேயே இங்கு அதிகமான காளைகள் கலந்துகொள்ள உள்ளதால் இந்த ஜல்லிக்கட்டை உலக சாதனையில் இடம்பெறச் செய்வதற்காக கின்னஸ் உலக சாதனை மதிப்பீட்டுக் குழு வருகை தந்துள்ளது.

click me!