விழுப்புர நகர மேம்பாட்டு திட்டங்களுக்காக ஆரோவில் அறக்கட்டளைக்கு விசிட் அடித்த ஆட்சியர்

Published : May 28, 2025, 07:34 PM IST
Auroville

சுருக்கம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் குழுவினர் ஆரோவில் இருக்கும் நிலையான வளர்ச்சி வாய்ப்புகளை குறித்து ஆராய்ந்தனர். இதுகுறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

Villupuram Collector Visits Auroville Foundation : இந்த கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் (ஐ.ஏ.எஸ்), கூடுதல் ஆட்சியர் ஜே.இ. பத்மஜா (ஐ.ஏ.எஸ்) மற்றும் மாவட்ட நிர்வாகக் குழுவினர்களுடன் ஏ.டி.டி.சி உறுப்பினர் சிந்துஜா, ஏ.டி.எஸ்.சி உறுப்பினர் அந்திம் மற்றும் ஆரோவில் அறக்கட்டளையின் மூத்த ஆலோசகர் ஸ்ரீ கோஷி வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த குழுவினர் கிராமப்புற வீட்டுமனை வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவு-குறைந்த கட்டிடத் தொழில்நுட்பங்களை ஆராய்ந்தனர். இவர்களை ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளர் டாக்டர் ஜெயந்தி. எஸ். ரவி (ஐ.ஏ.எஸ்) வரவேற்று, திட்டங்கள் குறித்து வழிநடத்தினார்.

இந்த சந்திப்பில், நிலையான கட்டுமானத் தொழில்நுட்பங்களின் ஆய்வு குழுவினர் ஆரோவில் பயன்படுத்தப்படும் குறைந்த-செலவு, புதுமையான மேற்கூரை மற்றும் சுவர் அமைப்புப் பொருட்களை நேரில் சென்று பார்வையிட்டனர். கனரக கான்கிரீட் இல்லாமல், இயற்கை மற்றும் நிலைக்கருவியான பொருட்களைப் பயன்படுத்தி இரண்டு அல்லது மூன்று மாடி கட்டமைப்புகளை எழுப்பும் தனித்துவமான கட்டுமான முறைகளை குறித்து கற்றனர். மேலும் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் (CSR) குழுவினர் குறிப்பாக பின்வரும் தொழில்நுட்பங்களை ஆய்வு செய்தனர்:

அழுத்தப்பட்ட நிலைப்படுத்தப்பட்ட மண் செங்கற்கள் (CSEB), எஃப்.சி சேனல் மேற்கூரை அமைப்புகள், நிலையான கட்டுமான முறைகளால் கட்டப்பட்ட கினிசி பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டனர். இங்கு மின்சார வாகனங்கள் மற்றும் சைக்கிள்களின் உற்பத்தி மற்றும் பராமரிப்பு நடைபெற்று வருகின்றது. மேலும் சூறாவளியினால் வீழுந்த மரங்களை மீண்டும் பயன்படுத்தும் "பூஜ்ஜிய கழிவு" நோக்கத்துடன் செயல்படும் மரச்சாமான் பட்டறையையும் பார்வையிட்டனர்.

ஆரோவில் இருக்கும் வீடு மற்றும் பயன்பாட்டு பொருட்களை கண்டறிய ஒரு ஆரோவிலியன் வீட்டிற்கு சென்றனர் குழுவினர். அங்கு இலகுவான மேற்கூரை வடிவமைப்புகள் மற்றும் கோடை வெப்பத்தைத் தாங்கும் வகையில் இருக்கும் கட்டுமான முறைகளைக் குறித்து விவாதித்தனர். இதனையடுத்து இயற்கைக் கைசோப்பு, பாத்திரங்கழுவி, நறுமண மெழுகுவர்த்திகள் போன்ற அடிப்படையிலான தயாரிப்புகளை உருவாக்கும் ப்ரோபயாடிக் பிரிவைச் குழுவினர் சந்தித்தனர்.

அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், ஆரோவில் கட்டிடக்கலை மற்றும் கைவினைப்பொருட்கள், பெண் தொழில்முனைவோருக்கான ஆதரவு போன்ற திட்டங்களைக் குறித்து ஆரோவில் இருக்கும் அதிகாரிகளுடன் பேசினார். அதில், வீடு இல்லாமல் இருப்போர் மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PM-AY) திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் இத்தகைய சுற்றுச்சூழல்-நட்பு, செலவுக் குறைந்த வீடுகளை அமல்படுத்தும் திட்டங்களை குறித்து ஆராய முன்வைத்தார்.

ஆரோவில் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் குழுவினரின் இந்த சந்திப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு குறைந்த, தொழில்நுட்ப உதவி கொண்ட கிராமப்புற வளர்ச்சிக்கு இது ஒரு முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!