தமிழ விவசாயிகளுக்கு ஜாக்பாட்! வங்கி கணக்கிற்கு தேடி வரும் நிலுவைத் தொகை - அரசு அறிவிப்பு

Published : May 28, 2025, 04:23 PM IST
Sugarcane farmers

சுருக்கம்

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் கரும்பு நிலுவைத் தொகை ரூ.97.77 கோடி வழங்கி உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார், என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் 2024 - 25ம் ஆண்டு அரவைப் பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 16 தனியார் என மொத்தம் 30 சர்க்கரை ஆலைகள் அரவைப் பணி மேற்கொண்டுள்ளன.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 2024 - 25 பருவத்தில் 15.05.2025 வரை 18.81 லட்சம் மெட்ரிக் டன் அரவை செய்து 8.40 சதவீத சர்க்கரை கட்டுமானத்தில் 1.58 லட்சம் மெட்ரிக் டன் ்சர்க்கரை உற்பத்தி செய்துள்ளன. அரவை மேற்கொண்ட 12 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் தாங்கள் கொள்முதல் செய்து, அரவை செய்த 10.30 லட்சம் மெட்ரிக் டன் கரும்பிற்கு வழங்க வேண்டிய 329.34 கோடி ரூபாயை தங்கள் ஆலையின் சொந்த நிதியில் இருந்து கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு தொகையை வழங்கி உள்ளன.

அதன்படி கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் விதமாக தமிழக அரசு 5920 விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழிவகைக் கடனாக 97.77 கோடி ரூபாயை அனுமதித்துள்ளது. இந்த நிதியுதவி கொண்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு சர்க்கரை ஆலைகளால் கரும்பு பணம் நிலுவையின்றி முழுமையாக வழங்கி முடிக்கப்பட்டு விட்டதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசின் இந்த செயலுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்