த.வெ.க.வில் இருந்து கோவை வைஷ்ணவி விலகல்!

Published : May 03, 2025, 07:40 PM IST
த.வெ.க.வில் இருந்து கோவை வைஷ்ணவி விலகல்!

சுருக்கம்

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து வைஷ்ணவி விலகியுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், மக்கள் பணிக்கு முற்றுப்புள்ளி வைக்க சிலர் முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இருந்து விலகியுள்ள வைஷ்ணவி, தான் எந்தத் தளத்தில் இருந்தாலும் மக்களுக்கான சேவையை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் செயல்பாட்டாளர் வைஷ்ணவி பகிரங்கமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

"மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். நீயெல்லாம் ஒரு பெண்ணா? உனக்கெல்லாம் எதுக்கு அரசியல், ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே இரு. உனக்கு என்ன தெரியும் அரசியலை பற்றி வசம்பு வார்த்தைகளால் நசுக்கப்படுகிறேன்.

எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். கட்சியின் வளர்சிக்காக என்னை சுதந்திரமாக மக்களைச் சந்திக்க விடுங்கள் என்று மட்டும்தான் கோரிக்கை வைத்தேன். ஆனால் அதற்கும் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. என்னுடைய மக்கள் பணிக்கு ஒருசிலர் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.

மக்களுக்கான சேவையை எந்த தளத்தில் இருந்தாலும் நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். இன்று முதல் நான் என்னை தமிழக வெற்றிக்கழகத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக்கொள்கிறேன்.

என்னுடைய பணியாற்றிய அனைத்து தொண்டர்களும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்"

இவ்வாறு வைஷ்ணவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பராசக்தி படம் எப்படி இருக்கு? கனிமொழி கொடுத்த ‘பளீச்’ பதில்!
டிக்கெட் இல்லன்னு கவலையே வேண்டாம்.. தெற்கு ரயில்வே கொடுத்த பொங்கல் ஸ்பெஷல் கிஃப்ட்!