விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு! த.வெ.க. அரசியலில் திருப்புமுனையா?

Published : Feb 10, 2025, 06:41 PM ISTUpdated : Feb 10, 2025, 09:53 PM IST
விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு! த.வெ.க. அரசியலில் திருப்புமுனையா?

சுருக்கம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை அணுகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகம் குறித்து இருவரும் பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) என்ற கட்சியை ஆரம்பித்தார். 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் புறக்கணித்த விஜய், 2026ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்திய விஜய், கடுமையான திமுக எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுத்திருக்கிறார். விக்கிரவாண்டி மாநாட்டுக்குப் பிறகு அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய் திமுக அரசை மன்னராட்சியுடன் ஒப்பிட்டு விமர்சினம் செய்தார். நீட் விவகாரம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், வேங்கை வயல் விவகாரம், மதுரை டிங்ஸ்டன் சுரங்கப் போராட்டம் போன்றவற்றில் ஆளும் திமுக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

இனக் கலவரத்திற்கு மோடியும், அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும்- கனிமொழி அதிரடி

விஜய் சுற்றுப்பயணம்:

இருந்தாலும் இன்னும் கள அரசியலுக்கு வரவில்லை, தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஏதும் பேசவில்லை என விஜய்யின் அரசியல் அணுகுமுறை குறித்து பல விமர்சனங்களும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இதற்கு பதில் சொல்லும் த.வெ.க.வினர் 'ஜனநாயகன்' படத்தின் வேலைகள் முடிந்ததும் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து களத்தில் மக்களைச் சந்திப்பார் என்று கூறுகின்றனர். அதற்கான ஏற்பாடுகள் இப்போதே நடைபெற்று வருகின்றன என்றும் சொல்கிறார்கள்.

இதனிடையே, கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியும் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார். இச்சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா த.வெ.க.வில் இணைந்திருக்கிறார். அவர் கட்சியில் சேர்ந்தவுடன் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக ஐ.டி. பிரிவை கவனித்து வந்த சி.டி.ஆர். நிர்மல் குமாரும் த.வெ.க.வில் இணைந்துள்ளார். முதலில் பாஜகவில் இருந்த நிர்மல் குமார், பிறகு அதிமுகவுக்குத் தாவினார். இப்போது அதிமுகவில் இருந்து விஜய் கட்சியில் சேர்ந்திருக்கிறார்.

ரஜினி கன்னட சினிமாவை கைவிட்டது ஏன்? நடிகர் அசோக் சொன்ன சீக்ரெட்!

பிரசாந்த் கிஷோர் - விஜய் சந்திப்பு:

இந்நிலையில் புதிதாக பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிராசாந்த கிஷோரையும் விஜய் அணுகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆதவ் அர்ஜூனாவின் ஏற்பாட்டில் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெற்றது என்று சொல்லப்படுகிறது. பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் விஜய் - பிரசாந்த கிஷோர் சந்திப்பு நடந்தது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பின்போது, வரும் 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் வியூகம் வகுப்பது பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதற்காக விஜய் மற்றும் பிரசாந்த் கிஷோர் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாமா? அப்படி கூட்டணி ஏற்பட்டால் தொகுதிப் பங்கீடு செய்வது எப்படி என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாகத் தெரிகிறது.

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு அதிக கட்டணம் ஏன்?

2026 தேர்தல் கூட்டணி என்ன?

நாட்டிலேயே மிகவும் பிரபலமான தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் ஏற்கெனவே பாஜக, காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுக்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறார். 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் "விடியல் மீட்புப் பயணம்" என்ற பிரச்சாரப் பயணத்தைத் திட்டமிட்டுக் கொடுத்தவர் அவர்தான்.

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் அதிமுக முன்னெடுத்துள்ள "யார் அந்த சார்?" என்ற பிரச்சாரத்திற்கும் ஐடியா கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர் தான். அதிமுகவின் "யார் அந்த சார்?" என்ற பிரசாரம் சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டாகி திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வெற்றிகரமான தேர்தல் வீயூக வகுப்பாளராக அறியப்படும் பிரசாந்த் கிஷோர் விஜய் கட்சியின் தேர்தல் வியூகத்தை அமைக்க இருக்கிறார் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பனையூரில் விஜய் - பிரசாந்த் கிஷோர் இடையே நடந்த தனிப்பட்ட சந்திப்பு த.வெ.க.வின் அரசியலில் திருப்புமனையை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குழந்தை வளர்ப்பு: வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு சில டிப்ஸ்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!