தவெக பொதுக்குழு கூட்டம்! டாஸ்மாக் முறைகேடு உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்! இதோ முழு விவரம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் டாஸ்மாக் முறைகேடு, சாதிவாரி கணக்கெடுப்பு உட்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

TVK General Committee Meeting! 17 resolutions passed tvk

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில்  உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில், பொதுக்குழுவில் டாஸ்மாக் முறைகேடு, சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

17 தீர்மானங்கள் விவரம்

Latest Videos

* மாநில அரசுகளுக்கு அதிகாரங்களை மத்திய அரசு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்

* இருமொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தீர்மானம்

* டாஸ்மாக் முறைகேடு,  சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் தீர்மானம்

* பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது

* இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்துவது ஒன்றை தீர்வு

* வேளாண் சட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகள் உரிமையை பறிக்கும் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். 

* சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்.

* தவெக பொதுக்குழுவில் கட்சி குறித்த முடிவுகள் எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம்

*  2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க தலைவருக்கு முழுமையான அதிகாரம்

*  தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகளுக்கு வாழ்த்து 

*  தவெக கட்சியில் உயிரிழந்த நிர்வாகிகளுக்கு இரங்கல்  

*  மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம்

* பன்னாட்டு அரங்கிற்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட வேண்டும் 

*  அரசு ஊழியர்களை நம்ப வைத்து ஏமாற்றியதற்கு கண்டனம்

*  மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மீனவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் தீர்மானம்

vuukle one pixel image
click me!