சென்னை தாம்பரத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
Tambaram Train Derailment: Three Coaches Off Tracks, Passengers Alarmed: சென்னை தாம்பரம்- தாம்பரம் சானடோரியம் இடையே இன்று இரவு சரக்கு ரயில் ஒன்று திடீரென தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது தாம்பரத்தில் இருந்து சென்ற சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டது. இது கார்களை ஏற்றிச்செல்லும் சரக்கு ரயிலாகும். திடீரென சரக்கு ரயில் தடம் புரண்டதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தடம்புரண்ட ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாம்பரம் சென்னை கடற்கரை இடையே புறநகர் ரயில்களுக்கான பாதை, எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான பாதைகள் தனித்தனியாக உள்ளன.
தாம்பரம் டூ ராமேஸ்வரம் புதிய ரயில்! அண்ணாமலை கோரிக்கையை ஏற்ற ரயில்வே அமைச்சர்!
போக்குவரத்தில் பாதிப்பு இல்லை
இந்த சரக்கு ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையிலும், புறநகர் மின்சார ரயில் பாதையிலும் செல்லாமல் பிரத்யேக பாதையில் சென்றுள்ளது. இதனால் பயணிகள் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தடம் புரண்ட பெட்டிகளை தூக்கி நிறுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்கு காரணம் என்ன?
சரக்கு ரயில் தடம் புரண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாம்பரத்தில் இருந்து தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையம் சுமார் 1 கிமீ தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரையிலான வழித்தடம் ஒரு முக்கியமான ரயில் வழித்தடமாக உள்ளது.
மிகவும் பிசியான வழித்தடம்
சென்னை கடற்கரை தாம்பரம் இடையே தினமும் 100க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மிகவும் பிசியான வழித்தடம் என்பதால் இந்த ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். 5 அல்லது 10 நிமிடம் ரயில்கள் தாமதமாக சென்றாலே பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவார்கள். இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் சரக்கு ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளி கட்டடம் இல்லாததால் மரத்தடியில் நடக்கும் வகுப்பு! பொங்கியெழுந்த அண்ணாமலை!