மதுரை தனியார் பள்ளியில் சீருடை தைக்க வந்த டெய்லர், மாணவிகளுக்கு தவறான முறையில் அளவு எடுத்ததாக புகார் எழுந்தது.
மதுரை எம்.கே.புரம் பகுதியில் ஸ்ரீவாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவிகளுக்கான சீருடை தைப்பதற்கு அளவெடுக்க ஆண் டெய்லரை வரவழைத்து கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வந்தது. டெய்லர் அளவு எடுத்தால் அதை குறித்து கொள்ள ஒரு பெண்ணும் வந்திருந்தார்.
ஆண் டெய்லர்
பள்ளி மாணவிகளுக்கு டெய்லர் அளவு எடுக்கும் போது உடல் பாகங்களில் கைப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் எதிர்த்துள்ளார். ஆனால், பள்ளி ஆசிரியை அந்த மாணவி உள்ளிட்ட அனைத்து மாணவிகளையும் கட்டாயப்படுத்தி அளவு எடுக்க வைக்க வைத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஏப்ரல் மாதத்தில் கொத்து கொத்தாக விடுமுறை! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் பள்ளி மாணவர்கள்!
பள்ளி மாணவி பரபரப்பு புகார்
இதுதொடர்பாக அந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். பின்னர் அம்மாணவி மதுரை சுப்பிரமணியபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், நான் 10ம் வகுப்பு படிக்கிறேன் மாணவிகளின் உடல்பாகங்களை தொட்டு டெய்லர் அளவு எடுத்தார். இதுதொடர்பாக என் வகுப்பு ஆசிரியரிடம் கூறியபோது இவ்வளவு பேர் அளவு எடுத்துக்கொள்கிறார். நீ என் பிரச்சனை செய்கிறாய் என்று கூறி டெய்லரும், ஒரு பெண்ணும் வலுக்காட்டாயமாக எனக்கு அளவு எடுத்தனர். அப்போது டெய்லர் எனது உடல் பாகங்களை டெய்லர் தெதாட்டார். எனவே டெய்லர் மீதும் அவருடன் வந்த பெண் மற்றும் கட்டாயப்படுத்திய வகுப்பு ஆசிரியயை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: என்னை திருமணம் செய்து விட்டு அவளுடன் ஹனிமூன் போயிட்டு வரியாடா! பெண்ணால் கோவை ஏர்போர்ட்டில் பரபரப்பு!
போக்சோ வழக்கு
மாணவி புகாரின் அடிப்படையில் டெய்லர் அவருடன் வந்த பெண் மற்றும் வகுப்பு ஆசிரியை ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றபோது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.