மதுரைக்கு மற்றொரு முகமும் உண்டு. தூங்காநகரத்தின் ஒரு முகம் எவ்வளவு அழகானதோ அதற்கு முற்றிலும் எதிர்மாறான முகமும் உண்டு என்பதை உணர்த்துகிறது இச்செய்தி .
Madurai News: தூங்காநகரம் என்று அழைக்கப்படும் மதுரையின் முகம் எவ்வளவு அழகானதோ அதற்கு முற்றிலும் எதிர்மாறான முகமும் உண்டு என்பதை உணர்த்துகிறது இச்செய்தி . தூங்காநகரத்தின் முழுமுகத்தை பார்த்தவர்களில் பெரும்பாலானோர் 90-களில் வாழ்ந்தவர்களையே சாரும். இக் காலகட்டங்களில் மதுரை அரசியல் மற்றும் தொழிற்சார்ந்த நிறுவனங்கள் அசுர வளர்ச்சி பெற்ற காலகட்டங்களாகும்.
மதுரையில் குருசாமி, ராஜபாண்டி; யார் இவர்கள்?
தூங்காநகரத்தின் 90-களின் தொடக்கத்தில் இருந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மதுரையை சேர்ந்த ராஜபாண்டி ஆதரவாளரான சின்னமுனுசாமி என்பவர் வி.கே.குருசாமிக்கு பெரும் குடைச்சலாக இருந்துள்ளார். எனவே கீரைத்துறையில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் துவங்கிய பிரச்சனை, அதைப் பெரிதாக்கி சின்னமுனுசாமியை அக்டோபர் 30-ஆம் தேதி வி.கே,குருசாமியும் அவருடைய ஆட்களான பாம்பு பாண்டி, மாரிமுத்து, ராமமுர்த்தி, வழுக்கை முனுசு, கணுக்கண் முனியசாமி ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
மதுரையை தெறிக்கவிட்ட என்கவுண்டர்கள்:
அதைத் தொடர்ந்து வி.கே.குருசாமி ஆதரவாளரான சடையாண்டியை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் கொலைசெய்தனர். இந்த வழக்கில் 2018-ஆம் ஆண்டு மதுரை சிக்கந்தர்சாவடியில் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இதில் வெள்ளைக்காளி தப்பிவிட்டார். வெள்ளைக்காளி ஆதரவாளர்கள் வி.கே.குருசாமி வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தையே கொலை செய்ய முயல, வீட்டைப் பூட்டி போலீசாருக்கு தகவல் சொல்ல, போலீசார் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி ரவுடிகளை வெளியேற்றி சிலரை கைதும் செய்தனர்.
தலைமறைவான குருசாமி:
வெள்ளைக்காளி மற்றும் குருசாமி மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். பின்னர் வெளியே வந்த குருசாமியும் மகன் மணிகண்டனும் ராஜபாண்டி தரப்பை எதிர்க்க ஆளில்லாததால் சென்னை, பெங்களூரு என்று தலைமறைவாக வாழத்தொடங்கினார்கள்
கடந்த 20 ஆண்டுகளில் குருசாமி தரப்பில் 10 பேரும், ராஜபாண்டி தரப்பில் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் அதே போன்று மதுரையை உலுக்கிய சம்பவம் என்றால் தினகரன் பத்திரிகை எரிப்பு 3 உயிர்களை காவு வாங்கியதான்.
அட்டாக்பாண்டி தலைமையிலான அடியாட்கள் தினகரன் பத்திரிகை மீது நடத்திய தாக்குதல் மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சினால் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களான கோபி, வினோத், காவலாளி முத்துராமலிங்கம் ஆகிய அப்பாவி ஊழியர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்கள் என்று அடுக்கிகொண்டே போகலாம்.
மதுரையில் ஜாதி ஆவணக் கொலைகள்:
இதில் அதிக வளர்ச்சி பெற்ற கள்ளச்சாராய தொழில் போட்டி காரணமாக பல கொடூர கொலைகளும் ஒரு புறம் இருக்க மறுபுறம் அரசியல் மற்றும் ஜாதிய ஆணவ கவுரவ கொலைகளும் நடந்தது. பின்பு காலப்போக்கில் அரசியல் மறுதலாலும் நாகரிக வளர்ச்சியாலும் காவல் துறையின் கடும் நடவடிக்கையாலும் சற்று அமைதியின் தென்றல் வீசத் தொடங்கியது.
குடி, போதைக்கு அடிமையாகும் சிறார்கள்:
தென்றலுக்கு பின் வீசும் சூறாவளி போல் கடந்த சில மாதங்களாக மதுரையின் கோர முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. குடி மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவது மட்டுமில்லாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிறார்களை குற்ற சம்பவங்களில் ஈடுபடுத்தபடுத்துகிறர்கள். இச் சம்பவத்திலிருந்து கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியான சிறார் குற்றம் அதிகரிக்க காரணம் போதை மற்றும் சினிமா எனும் அணு ஆயுதத்தை பயன்படுத்துகின்றனர். சினிமாவில் வரும் தவறாக சித்தகரிக்கப்பட்ட கதாபாத்திரங்களை போல் தன்னை மாற்றி தவறான பாதைக்கு செல்கின்றனர். இதில் சிறார்களை மூளை சலவை செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
போதையில் தடம்மாறும் மதுரை சிறார்கள்:
இதில் உளவியல் ரீதியாக பார்த்தால் பெரும்பாலும் கற்றல் குறைபாடு உடையவர்களாக இருக்கிறார்கள். பள்ளியில் பயிலும்போது படுகின்ற அவமானமும் சமூகத்தின் புற அழுத்தம் காரணமாக தடம் மாறி செல்கிறார்கள். குறிப்பாக நாம் சிந்திக்க வேண்டிய விடயம் என்றால் கடந்த ஒரு வருடத்தில் மதுரையில் நடந்த குற்ற சம்பவங்களில் சிறார் குற்றங்களே அதிகம். இந்த வருடத்தில் தமிழத்தின் உச்ச குற்றத்தின் நகரம் என்றால் மதுரையே. கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிறார்களின் சதவிதம் 47.90 என ஒரு ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இதில் போதையில் தடம் மாறிய சிறார்கள் அதிகம். போதையின் பரிணாம வளர்ச்சி அளவு ஒவ்வொரு நாளும் நாம் நினைப்பதை விட உயர்த்துகொண்டேதான் செல்கிறது.
சமூகத்தின் சாபக்கேடு இதுதானா?
போதை மருந்தின் மாற்றம் புகையிலை (கூல் லிப் ) துவங்கி மெத்தனால் எனப்படும் (போதை மருந்தின் ராஜா) ஆட்கொல்லி போதைக்கு அடிமையாகி பாதிப்படைந்து உயிரிழக்கின்றனர். போதைக்கு அடிமையான சிறார்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது நாள்தோறும் அதிகரித்த வருகிறது. இந்நிலை நீடித்தால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு நாம் கனவில் கூட கற்பனை செய்ய முடியாத அளவிற்கு சமூகத்தின் நிலை மாறிவிடும். இந்நிலைமை நீடிக்கும்பட்சத்தில் தமிழகத்தின் நரகம் எனக் குறிப்பிடலாம். போதைக்கு எதிராக நாள்தோறும் எதிர்ப்பும் போராட்டமும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இத்தகைய நிலை நீடித்தால் அடுத்த சமூகமே இல்லாமல் போய்விடும் நிலை ஏற்பட்டு மனித இனத்தின் சாபக்கேடாய் அமையும்.
சினிமாவை மிஞ்சும் பயங்கரம்! மதுரையில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை! யார் இந்த காளீஸ்வரன்?