மண் அள்ளுவதில்தான் குறி... ஆறுகளை பாதுகாக்கவில்லை! பொதுப்பணித் துறைக்கு ஐகோர்ட் குட்டு!

Published : Mar 12, 2025, 12:50 PM IST
மண் அள்ளுவதில்தான் குறி... ஆறுகளை பாதுகாக்கவில்லை! பொதுப்பணித் துறைக்கு ஐகோர்ட் குட்டு!

சுருக்கம்

ஆறுகளில் மண் அள்ளுவதில்தான் பொதுப்பணித்துறையினர் கவனம் செலுத்துகின்றனர்; ஆறுகளை பாதுகாக்கவும், பராமரித்து கண்காணிக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. 

High Court Bench slams PWD:தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக சென்று கடலில் கலக்கிறது. சுமார் 295 கிலோ மீட்டர் பயணிக்கும் வைகை ஆற்றில் தேனி, மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் கழிவுநீர் கலக்கிறது.

மதுரை வைகை நதி மாசுபடுவது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை, கடந்தாண்டு தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது. வைகையில் கழிவுநீர் கலப்பது, குப்பைகள் கொட்டுவது போன்றவை குறித்தும் நீதிபதிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இதனிடையே, மழைநீர் வடிகால் அனைத்தும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டதாகவும், கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் சிறப்பு குழு அமைத்து, நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுவையும் உயர் நீதிமன்ற கிளை விசாரித்து வருகிறது. 

கோவையில் மலைகள், நீர்நிலைகளில் இருந்து மணல் கொள்ளை: அதிகாரிகளை லெப்ட், ரைட் வாங்கிய நீதிமன்றம்

இந்நிலையில்,  இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு கடுமையான கருத்துகளை தெரிவித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

நீதிபதிகள், "பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆறுகளில் மண் அள்ளுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். ஆறுகளை பாதுகாக்கவும், பராமரித்து கண்காணித்து உரிய நடவடிக்கையை எடுக்கவும் தவறிவிட்டனர். மாசு கட்டுப்பாட்டு வாரியம் வைகை அணையை பாதுகாக்க தவறிவிட்டது.

சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில் ஆறுகளில் கழிவுநீர் கலப்பதைக் கண்டறிந்து அபராதம் விதித்திருக்க வேண்டும். அப்படி உள்ளாட்சி அமைப்புகளும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அபராதம் விதித்திருந்தால் இப்போதுள்ள நிலை ஏற்பட்டிருக்காது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளும் தனித்தனியே, வைகை ஆற்றில் தற்போதைய நிலை குறித்தும் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்தும் பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

நீர்நிலை  மக்களுக்கான சொத்து. இதில் அரசியல் பார்க்க வேண்டாம். வைகை ஆற்றை பாதுகாக்க மாநில அரசு திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் ஏன் கொடுக்கவில்லை? அவ்வாறு திட்ட அறிக்கை கொடுத்தால், அந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவிட தயாராக உள்ளது" என்று கூறி, வழக்கு விசாரணையை நீதிபதிகள்  ஒத்திவைத்தனர்.

பாலாற்று மணலை அள்ளி கடலில் கொட்டப்போறீங்களா.. தமிழகத்தை குறிவைத்த அதானி. தலையின் அடித்து கதறும் சீமான்.

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்