
சென்னை காமராஜர் சாலையில் 76வது குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆளுநர் ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் வாகன அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. முதலவர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசின் பல்வேறு விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கினார்.
காவல்துறையில் சிறந்த காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. மொத்தம் 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.
ஜியோவின் புதிய 'சவுண்ட் பே' அம்சம் அறிமுகம்! எதற்காக தெரியுமா?
தமிழக காவல்துறை விருதுகள்:
சின்னகாமணன் (விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர்), மகா மார்க்ஸ் (விழுப்புரம் தாலுகா சட்டம் ஒழுங்கு காவல் நிலைய தலைமை காவலர்), கார்த்திக் (துறையூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு தலைமை காவலர்), சிவா (சேலம் மாவட்டம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர்), பூமாலை (சேலம் மாவட்டம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர்) ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கத்தை முதல்வர் வழங்கினார்.
விழா மேடையில் சிறந்த காவல் நிலையத்துக்கான விருதுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் பரிசு மதுரையின் C3 எஸ்எஸ் காலனி காவல் நிலையத்துக்குக் கிடைத்தது. 2வது பரிசு திருப்பூர் மாவட்டத்தின் திருப்பூர் வடக்கு காவல் நிலையமும், மூன்றாவது பரிசை திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி காவல் நிலையம் பெற்றன.
குடியரசு தின விழாவில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் அம்ஷாவுக்கு, மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது வழங்கப்பட்டது. 'அப்பாஸ் அலி டிரஸ்ட்' மூலம் இலவச ஆம்புலென்ஸ் சேவை செய்வதற்காக இந்த விருது அளிக்கப்பட்டது. தேனீ மாவட்டத்தை சேர்ந்த முருகவேல் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது வழங்கப்பட்டது.
AI படிப்புக்கு டாப் 5 பல்கலைக்கழகங்கள்! படிப்பை முடித்தவுடன் மில்லியன் டாலர் சம்பளத்துடன் வேலை!