தலைவர்களின் சிலைகளை சொந்த அலுவலகத்தில் வைக்க வேண்டியது தானே? ஐகோர்ட் அதிரடி!

Published : Feb 20, 2025, 03:32 PM ISTUpdated : Feb 20, 2025, 05:12 PM IST
தலைவர்களின் சிலைகளை சொந்த அலுவலகத்தில் வைக்க வேண்டியது தானே? ஐகோர்ட் அதிரடி!

சுருக்கம்

தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர் சிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. பொது இடங்களில் சிலைகள் வைப்பதை நீதிமன்றம் ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் முத்துக்கிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு திருவாரூர் குடவாசல் சாலை பகுதியில் நாச்சியார் கோவில் குளக்கரை பகுதியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலை பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ பாதிப்பு இல்லாத வகையில் தான் உள்ளது. 

இருப்பினும் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியியல் பிரிவு அதிகாரிகள் எம்ஜிஆர் சிலை அதன் அருகில் உள்ள கட்சிக்கொடியை அகற்றுமாறு நோட்டீஸ் அனுப்பினர். எம்ஜிஆர் சிலையை அகற்றக்கூடாது என பொதுமக்கள் சார்பில், அதிமுக சார்பிலும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 3 முறை முதல்வராக இருந்த எம்ஜிஆரின் சிலையை தன்னிச்சையாக அகற்றக்கூடாது, கருத்துக் கேட்பு கூட்டம், பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இதையும் படிங்க: சென்னையில் தின்னர் ஆலையில் பயங்கர தீ விபத்து! அலறியபடி வெளியேறி பள்ளி மாணவர்கள்! நடந்தது என்ன?

எம்ஜிஆர் சிலை அகற்றப்பட்டால் மக்கள் வருத்தமடைவார்கள். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு சிலை மற்றும் அதனருகில் உள்ள அதிமுக கொடியை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் 23-ம் தேதி முதல்! வானிலை மையம் கொடுத்த டேஞ்சர் அலர்ட்! அலறும் பொதுமக்கள்!

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களின் தலைவர்களின் சிலைகள் கட்சி கொடிகளை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே? பொது இடங்களில் வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. எந்த இயக்கமாக இருந்தாலும் சரி. கட்டாயமாக அனுமதிக்க முடியாது. எனவே இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய நேரிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை திரும்பப்பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!