நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்திலேயே தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர் உற்பத்திக் கருவியை தமிழ்நாடு ஏற்றமுமதி செய்துள்ளது. கோவையில் உள்ள ஆலையில் யெஸ் என்ற நிறுவனம் இந்தக் கருவியை உற்பத்தி செய்துள்ளது.
நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்திலேயே தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர் உற்பத்திக் கருவியை தமிழ்நாடு ஏற்றமுமதி செய்துள்ளது. கோவையில் உள்ள ஆலையில் யெஸ் என்ற நிறுவனம் இந்தக் கருவியை உற்பத்தி செய்துள்ளது.
இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தமிழகத் தொழில்துறை அமைச்சர் டி.ஆ்ர்.பி. ராஜா கூறியிருப்பதாவது:
இன்னொரு அருமையான செய்தி. இந்தியாவிலேயே முதல் முறையாக செமிகண்டக்டர் உற்பத்திக் கருவியை தமிழ்நாடு அயல்நாட்டுக்கு அனுப்பிவைத்துள்ளது. இதற்காக தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் துறை கடந்து வந்த பாதை ஒரு நீண்ட பயணம்! நோக்கியா, ஃபாக்ஸ்கான் ஆலைகளில் தொடங்கி இன்று இந்தியாவின் முதல் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியாளராக மாறியிருப்பது வரை ஒரு நெடிய பயணம்!!!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் செமிகண்டக்டர் துறையில் வலுவான கொள்கை கட்டமைப்புடன் செயல்பட்டு வருகிறோம்.
ஏடிஎம்மில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்! மே 1 முதல் அமல்!
Awesome News Again🎊
TAMIL NADU ships out INDIA’s FIRST Manufacturing Equipment !!!
What a journey it has been for Tamil Nadu’s ecosystem! From early days of Nokia and Foxconn to today being India’s #1 electronics exporter by a long, long distance… pic.twitter.com/UcLB7BHEYL
இன்று, இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் உபகரணத்தை கோயம்புத்தூரிலிருந்து ஏற்றுமதி செய்திருப்பதைக் கொண்டாடுகிறோம். இதனைத் தயாரித்த யெஸ் (YES) எனப்படும் யீல்டு என்ஜினியரிங் சிஸ்டம்ப் (Yield Engineering Systems) என்ற நிறுவனத்திற்கு நன்றி.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மேற்கொண்ட அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின்போது இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. கோயம்புத்தூரில் உள்ள YES நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் வணிக VeroTherm Formic Acid Reflow கருவி, ஒரு முன்னணி உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, உங்களுக்கும், கோவை மக்களுக்குப் பெருமை.
2025 தமிழக பட்ஜெட்டில் புதிதாக ரூ. 500 கோடி செமிகண்டக்டர் துறைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை உலகளாவிய செமிகண்டக்டர் மையமாக மாறப்போகிறது."
இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
சென்னையில் AC உடன் மின்சார ரயில் சேவை! டிக்கெட் 30 ரூபாய் முதல்!