தமிழக வானிலை அறிக்கையில் இந்தி மொழி சேர்க்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம். மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறி வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் தமிழ், ஆங்கிலத்தை தொடர்ந்து இந்தியிலும் வானிலை முன்னறிவிப்பு சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் வானிலை அறிக்கை
தமிழகத்தின் வானிலை அறிக்கையை மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதாவது தமிழகம், புதுவை மழை மற்றும் வெயில் குறித்த அப்டேட்டுகளை சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.
இதையும் படிங்க: நாளை தான் ரொம்ப மோசமான நாள்.! 4 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
அதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். தற்போது யாரும் எதிர்பாராத விதமாக இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆங்கிலத்திலும், ஆந்திராவில் ஆங்கிலம், தெலுங்கிலும், தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா விளக்கம்
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா கூறுகையில்:- 2024ம் ஆண்டு அக்டோபர் முதலே நடைமுறையில் உள்ளது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நாடாளுமன்ற குழு இந்த அறிவுறுத்தலை வழங்கியது. ஆகையால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியில் முன்னறிவிப்பு வெளியிட சென்னை மையத்தில் மொழிப்பெயர்பாளரும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்னை திருமணம் செய்து விட்டு அவளுடன் ஹனிமூன் போயிட்டு வரியாடா! பெண்ணால் கோவை ஏர்போர்ட்டில் பரபரப்பு!
சு.வெங்கடேசன் கண்டனம்
இதற்கு எம்.பி.சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தியைத் திணிக்கிறது. பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.