வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறுங்க.! சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வந்த ஸ்டாலின்

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Stalin brings separate resolution in the Assembly against the Waqf Board Amendment Bill KAK

Waqf board Stalin resolution : இஸ்லாமியர்கள் அல்லாவின் பெயரில் வழங்கப்படுகிற சொத்துகளை நிர்வகிக்க கூடியது வக்ஃபு வாரியம். இந்த வக்பு வாரியத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், வக்ஃபு கவுன்சில் என்ற அமைப்பில் பொதுவாக அனைவரும் முஸ்லிம்களாகவே இருப்பர். ஆனால் மத்திய அரசின் புதிய மசோதாவில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தவர் 2 பேரும் உறுப்பினராக இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டது.

இது போன்ற பல புதிய விதிகள் கொண்டுவரப்பட்டது.  இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு கிளம்பியதால் கூட்டுக் குழுவின் முடிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் படி  எதிர்க்கட்சிகளின் 500க்கும் மேற்பட்ட திருத்தங்கள் கொடுத்திருந்த நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளின் 14 திருத்தங்கள் மட்டும் கூட்டுக் குழுவில் ஏற்கப்பட்டன.

Latest Videos

வக்ஃப் திருத்த மசோதா: 14 திருத்தங்களுக்கு கூட்டுக்குழு ஒப்புதல், எதிர்க்கட்சிகள் கண்டனம்!

வக்ப் சட்ட மசோதா- இஸ்லாமியர்கள் போராட்டம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், வக்ப் போர்டு திருத்த மசோதா தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.  அதில்  "இந்தியத் திருநாட்டில் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கு அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. அதைப் பேணிக் காக்கும் கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு உள்ளது. ஆனால், அதற்கு மாறாக, சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில்,

சட்டசபையில் தீர்மானம்

1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தினை திருத்துவதற்கு கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டமுன்வடிவினை (The Waqf (Amendment) Bill, 2024) முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த தீர்மானத்தில் முன்மொழிந்துள்ளார்.இந்த மசோதாவிற்கு சட்ட மன்றத்தில் உள்ள ஜெகன்மூர்த்தி, வேல்முருகன் உள்ளிட்டவர் வரவேற்று மத்தியி அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

vuukle one pixel image
click me!