வெறுப்புணர்வு பற்றி எங்களுக்கு பாடம் எடுப்பதா? யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக சீறிய ஸ்டாலின்!!

மும்மொழி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனிடையே உபி முதல்வர் தமிழக அரசின் செயல்பாட்டை விமர்சித்த நிலையில் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.  

Stalin has responded to UP Chief Minister Yogi three language policy comment KAK

Three language policy opposition : பள்ளிகளில் மும்மொழி கொள்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய 2152 கோடி ரூபாய் நிதி ஒதுக்காமல் நிறுத்திவைத்துள்ளது. இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே மோதல் உருவாகியுள்ளது. இதற்கு தமிழக அரசு கூறுகையில் இரு மொழி கொள்கை தான் சிறந்தது எனவும், மும்மொழி கொள்கையால் தமிழகத்தில் எந்த பயனும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் நாங்கள் இல்லையெனவும், இந்தி மொழியை திணிப்பதைத்தான் எதிர்ப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. 

மோடியை சந்திக்கும் தமிழக எம்பிக்கள் குழு.! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்

Latest Videos

மும்மொழி கொள்கை தமிழக அரசு எதிர்ப்பு

இந்த நிலையில் இதற்கு எதிப்பு தெரிவித்து தமிழக பாஜக சார்பாக தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் இந்தி மொழிக்கு ஆதரவாக கையெழுத்து பெற்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதம், மொழி அடிப்படையில் பிரிவினையை உருவாக்குகிறார். மொழி என்பது ஒற்றுமையை உருவாக்கத்தான் பயன்பட வேண்டும்; மொழியை வைத்து பிரிவினை செய்யக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். 

யோகி ஆதித்யநாத் - பிரிவினை வாதம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகள் கற்றுத்தரப்படுவதாக கூறிய அவர்,  கன்னடம், மலையாளம் மொழிகளையும் கற்றுத்தருகிறோம். அத்துடன் வெளிநாட்டு மொழிகளையும் கற்றுத் தருகிறோம் என யோகி ஆத்தியநாத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பழமையான மொழிகளில் சமஸ்கிருதத்தைப் போல தமிழும் ஒன்று. தமிழுக்கு நீண்ட வரலாறும் உயரிய பண்பாடும் உள்ளது. மொழியின் அடிப்படையிலான பிரிவினைவாத நடவடிக்கைகள் குறித்து மக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். 

Tamil Nadu’s fair and firm voice on and is echoing nationwide—and the BJP is clearly rattled. Just watch their leaders’ interviews.

And now Hon’ble Yogi Adityanath wants to lecture us on hate? Spare us. This isn’t irony—it’s political black… https://t.co/NzWD7ja4M8

— M.K.Stalin (@mkstalin)

 

அதிர்ச்சியில் பாஜக

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இருமொழிக் கொள்கை மற்றும் சரியான முறையிலான  தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழகத்தில் குரல் தேசிய அளவில் எதிரொலித்துள்ளது. இதன் காரணமாக  பா.ஜ.க அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதன் காரணமாகவே பாஜக  தலைவர்களின் பேட்டியை பார்த்தாலே தெரிகிறது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா?

வெறுப்பு குறித்து எங்களுக்கு பாடம் நடத்துவதா.?

எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல; வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம் என குறிப்பிட்டுள்ளார். மொழி அடிப்படையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. மொழி திணிப்பையும், ஆதிக்கத்தையும் எதிர்க்கிறோம். எந்த மொழிக்கும் எதிரானவர்கள் நாங்கள் அல்ல. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

vuukle one pixel image
click me!