
BJP Alliance Exit : அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் தங்க விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மோடி பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் பாஜக கூட்டணியில் இணைந்தோம். இந்த நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தல் வேறு சட்டமன்ற தேர்தல் வேறு என்பதால் வெளியேறனோம், அமித்ஷா சென்னையில் பேசிய போது ஓபிஎஸ் டிடிவி இணைப்பீர்களா? என்ற கேள்விக்கு அப்போது அவர் அது அதிமுக உட்கட்சி விவகாரம் என பதிலளித்தார்.
யாரை எதிர்த்து எதற்காக கட்சி ஆரம்பித்தேன் , அதற்கு எதிராகவே (அதிமுக )அவர்களோடு சேர்ந்துகொண்டு அப்படியெல்லாம் எம்பி, எம்.எல்.ஏ ஆகும் கூட்டமல்ல நாங்கள் என கூறினார். அவர்களோடு இருக்க விருப்பமில்லை அவரோடு. சட்டமன்றத்துக்கு செல்ல விருப்பமில்லை என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலை இருந்தவரை கூட்டணியை சரியாக கையாண்டார் ஆனால் நயினார் நாகேந்திரன் சரியாக கையாளவில்லை, நான் NDA வில் வெளியேற யாரும் காரணமல்ல, என் தொண்டர்களின் விருப்பம் தான் என தெரிவித்தார்.
கூட்டணி ஆட்சி எனவும், முதலமைச்சர் அதிமுகவை சேர்ந்தவர் என அமித்ஷா என்கிறார். நாங்கள் ஒருவரையும் அவருடன் சிலருடன் உள்ளவர்களை எதிர்த்து தொடங்கியது தான் அமமுக, தொண்டர்கள். கூட்டணியில் இருந்து வெளியேறியதை ரூம் போட்டுலாம் யோசிக்வில்லை, தொண்டர்கள் தான் எனக்கு முக்கியம், நயினார் நாகேந்திரன் காரணம் இல்லை, கூட்டணி அமைத்தவர்கள் காரணமில்லை, அவர்களுக்காக நாங்கள் தேவையில்லை என கூட நினைத்திருக்கலாம் என கூறினார். அண்ணாமலை எங்களை கூட்டணிக்கு கொண்டுவந்தார்,
நயினார் நல்ல நண்பர் அண்ணாமலைக்கு எனக்கும் நல்ல நட்பு. அவர் வெளிப்படையாக இருந்தார், அண்ணாமலையின் முயற்சியில் தான் கூட்டணியில் இருந்தோம்; அண்ணாமலை நீக்கப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது, அமமுகவிற்கு சரியாக இருக்காதே என நினைத்தோம் ; அமித்ஷா ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் முயற்சி தோல்வி அடைந்ததற்கு காரணம் நாங்கள் அல்ல என தெரிவித்தார். இப்போது நாங்கள் விலக நாங்கள் காரணமல்ல விலக முடிவு எடுப்பதற்கு மாநில தலைவரின் செயல்பாடாக இருக்கலாம் என தெரிவித்த அவர், ஓபிஎஸ்சுடன் பாஜக மாநில தலைவர் பேசியது மன வருத்தத்தை ஏற்படுத்தியது,
பன்னீர்செல்வம் விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் பேசியது அப்பட்டமான பொய், அவருக்கு நடந்தது எனக்கும் நடக்கும் ,நாங்கள் சிறியவர்கள் , பெறியவர்கள் வந்துவிட்டார்கள் என இருக்கின்றனர். கூட்டணியில் இருப்பது குறித்து புரிய வேண்டியவர்களுக்கு புரியும், எதற்காகவும், யாருக்கும் அடி பணிய மாட்டேன் ; நாங்கள் சேரும் கூட்டணி உறுதியாக ஆட்சியமைக்கும், அதில் முதல் தேர்வு NDA கூட்டணிதான், அதிமுக நிர்வாகிகள் ஒருங்கிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைவது அம்மாவின் கட்சிக்கு நல்லது, அங்குள்ள தொண்டர்கள் அதனை யோசிக்கவில்லை என்றால் அம்மாவின் ஆட்சி அமைவது கடினம்,