
Airport Moorthy attack : புரட்சி தமிழகம் அமைப்பின் மாநில தலைவராக உள்ள ஏர்போர்ட் மூர்த்தியை நடுரோட்டில் வைத்து இரண்டு மூன்று நபர்கள் தாக்கிய நிகழ்வு தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிர்வாகியான கும்பகோனம் மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த ஸ்டாலினை மர்ம நபர்கள் கொலை செய்ய முயன்றுள்ளனர். அவரது அலுவலகத்தில் வெடி குண்டு தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் கும்பகோனம் மாவட்டம் ஆடுதுறையில் பதற்றமான நிலை நீடித்தது. மேலும் அங்குள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வெடி குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக பாமகவினர் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக புரட்சி தமிழகம் அமைப்பின் மாநில தலைவராக உள்ள ஏர்போர்ட் மூர்த்தியும் வந்துள்ளார். பாமகவினர் வருகைக்காக காத்திருந்த போது அந்த பகுதியில் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நபர்கள் புரட்சி தமிழகம் அமைப்பின் மாநில தலைவராக உள்ள ஏர்போர்ட் மூர்த்தியை பார்த்து எப்படி எங்கள் தலைவர் திருமாவளவளை விமர்சித்து பேசலாம் என கேள்வி எழுப்பினார்.
மேலும் ஆபாச வார்த்தைகளால் திட்டியும் உள்ளார். இதனையடுத்து இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் புரட்சி தமிழகம் அமைப்பின் மாநில தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை கடுமையாக அந்த நபர் தாக்கியுள்ளார். டிஜிபி அலுவலகம் அருகே நடைபெற்ற நடுரோட்டில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நபர் தனது காலில் இருந்த செருப்பாலும் அடிக்க முயன்றார். மேலும் ஏர்போர்ட் மூர்த்தியின் சட்டையையும் கிழிக்கப்பட்டது.
எதிர்பாரா இந்த சம்பவத்தை பார்த்த போலீசார் இரு தரப்பையும் தடுக்க முற்பட்டார். இருந்த போதும் தொடர்ந்து தாக்குதல் நீடித்தது. ஒரு கட்டத்தில் விசிக நபர் தான் வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றார். டிஜிபி அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.