பாகிஸ்தான் சிறையில் காசிமேட்டை சேர்ந்த 6 மீனவர்கள்... விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள்- டிடிவி தினகரன்

By Ajmal Khan  |  First Published Feb 5, 2024, 12:23 PM IST

எல்லைத்தாண்டி மீன் பிடித்தாக சென்னை காசிமேடு மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ள நிலையில், மீனவர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். 
 


தமிழக மீனவர்கள் கைது

இலங்கை மற்றும் பாகிஸ்ந்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்களை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.குஜராத் மாநிலத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக திசைமாறி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதால் அந்நாட்டு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Latest Videos

பள்ளி மாணவன் ஓட்டிச்சென்று விபத்துக்குள்ளான கார்; 1 மாணவன் பலி, 4 மாணவர்கள் படுகாயம் - சுற்றுலாவின் போது சோகம்

பாகிஸ்தான் சிறையில் சென்னை மீனவர்கள்

தமிழக அரசிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், பாகிஸ்தான் சிறையில் ஒரு மாதத்திற்கும் மேலாக சிக்கித் தவிக்கும் காசிமேடு மீனவர்களை மீட்டுத்தருமாறு அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போல, நேற்று வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையினரை கண்டித்து மீனவர்கள் அனைவரும் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்

எனவே, பாகிஸ்தான் மற்றும் இலங்கை சிறைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை மீட்பதோடு, இனிவரும் காலங்களில் எவ்வித அச்சமுமின்றி மீனவர்கள் தங்களின் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு தேவையான நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

புதுச்சேரி தொகுதியை குறிவைக்கும் தமிழிசை.? தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பிடி கொடுக்காமல் நழுவும் ரங்கசாமி
 

click me!