சூறைக்காற்றால் வேளாண் பயிர்கள் பாதிப்பு..! காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு இதை உடனே செய்யனும் - டிடிவி தினகரன்

By Ajmal Khan  |  First Published Jun 9, 2023, 11:21 AM IST

சூறைக்காற்று மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  வேளாண்துறை அதிகாரிகள் கண்டறிந்து சேத விவரங்களை மதிப்பீடு செய்து தாக்கல் செய்யும் வரை காத்திருக்காமல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 


சூறைக்காற்றால் விவசாயிகள் பாதிப்பு

கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட  மாவட்டங்களில் தீடிரென பெய்த கோடை மழையின் காரணமாகவும், சூறாவளி காற்றின் காரணமாகவும், பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு போன்ற பயிர்கள் முழுமையாக சேதமடைந்தது. மேலும் முருங்கை மரங்கள், பழா உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சேத விவரங்களை கணக்கிட்டு  இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தநிலையில்  இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வேளாண் பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சூறைகாற்றுடன் கூடிய கனமழையால்...

Tap to resize

Latest Videos

இனியும் விவசாயிகளை ஏமாற்றாமல், உடனடியாக தமிழக அரசு இதை செய்ய வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

இடைக்கால நிவாரணம் வழங்கிடுக

வாழை, சோளம், முருங்கை, தென்னை, பப்பாளி ஆகிய பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதில் இருந்து தற்போதுதான் மீண்டு வந்து மீண்டும் கடன் வாங்கி கோடைகால பயிர் செய்த நிலையில் சூறாவளி காற்றில் அவையும் சேதம் அடைந்ததால் பெரும் வேதனையில் தவிக்கின்றனர். எனவே, தமிழ்நாடு முழுவதும் வேளாண்துறை அதிகாரிகள் சேத விவரங்களை மதிப்பீடு செய்து பாதிப்புகள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யும் வரை காத்திருக்காமல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்வதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

பெற்ற குழந்தைபோல் வளர்த்த பயிர்களை இழந்து வேதனையில் தவிக்கும் விவசாயிகள்.! இழப்பீடு வழங்க இபிஎஸ் கோரிக்கை

click me!