இரண்டு சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்த 73 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் தேனி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்ற 73 வயது முதியவர் கடந்த 2019ம் ஆண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 6, 8 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கும், மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்று சிறுமிகள் இருவருக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டு தொல்லைகளை கொடுத்தாக குழந்தைகளின் பெற்றோர் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஐயப்பன் என்ற முதியவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
undefined
பட்டியலின மக்கள் கோவிலுக்குள் வர எதிர்ப்பு; விழுப்புரத்தை தொடர்ந்து கரூரில் கோவிலுக்கு சீல்!
இந்நிலையில் சாட்சிகள் விசாரணை முடிவுற்ற நிலையில் இன்று 73 வயது முதியவரான ஐயப்பன் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி கோபிநாத் தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் குற்றவாளியான முதியவர் ஐயப்பனை மதுரை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
என்ன கேக்காம நீ உள்ள வந்திருக்கலாம்; ஆனா நான் சொல்லாம உன்னால ஒரு அடி இறங்க முடியாது - வைரல் வீடியோ