பெரம்பலூர் : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் சட்ட எச்சரிக்கை !

Published : Nov 25, 2026, 09:03 PM IST

பெரம்பலூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்தாதது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று சாடினார். இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்துவோம் என்றும் அவர் எச்சரித்தார்.மேலும், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். இது தொடர்பான நிகழ்ச்சிக் காட்சிகள் மற்றும் நயினார் நாகேந்திரனின் பேட்டி இதில் இடம்பெற்றுள்ளன.

02:03கள்ளக்குறிச்சி பரபரப்பு : எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி DYFI போராட்டம் !
03:50பெரம்பலூர் : திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் சட்ட எச்சரிக்கை !
02:49கள்ளக்குறிச்சி : எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகாரைக் கண்டித்து திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!
02:30கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் நிவாரணம் கோரி ராமநாதபுரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
03:21கோவை: வாக்காளர் விழிப்புணர்வு வினாடி-வினா, கட்டுரைப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
07:03திருப்பரங்குன்றம் தீர்ப்பை எரிக்க முயன்ற போராட்டக்காரர்கள் கைது - போலீசாருடன் தள்ளுமுள்ளு!
04:54விசாரணைக் குழுவில் யார் இருக்க வேண்டும் என நீதிமன்றமே நிபந்தனை விதித்துள்ளது - கனிமொழி பேட்டி!
04:35திருவண்ணாமலையில் பலத்த மழை : குளிர்ந்த வானிலையால் மக்கள் மகிழ்ச்சி !
03:20ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் ஆலயத்தில் சகஸ்ரதீப வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு!