மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் கலைத்திருவிழா.! அசத்தும் கல்வித்துறையின் திட்டம்

Published : Jun 21, 2025, 02:30 PM IST
Government School Students

சுருக்கம்

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் விதமாக கலைத்திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. 

School Student Kalai Thiruvizha special training camps : மாணவர்களுக்கு கல்வி அறிவோடு தனித்திறமையை மேம்படுத்துத்தும் வகையில் கலைத்திருவிழா பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-23 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் "மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் இலட்சக்கனக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் ரூ.5கோடி மதிப்பீட்டில் கலைத்திருவிழா நடத்தப்படும் என தெரிவித்தார். இதனையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலைத் திறன்களை வெளிகொணரும் விதமாக,

பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாநில அளவில் கலையரசன், கலையரசி பட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மாணவர்களின் கலைத்திறமையை வளர்க்கும் முயற்சி

அதனைத் தொடர்ந்து, 2023-24 ஆம் ஆண்டு. 2024-25 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போதும் பள்ளி மாணவர்களுகான கலைத்திருவிழா தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து இக்கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பங்கேற்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தப்படும்" என தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி, 2024- 25 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் தனித்தனியே கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது.

மாணவர்களுக்கு புத்தொளி பயிற்சி

கடந்த மூன்று ஆண்டுகளில் கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்ற மற்றும் அதன் தொடர்ச்சியாக, 2025-26 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கீழ்கண்ட அறிவிப்பினை அறிவித்துள்ளார். கலைத்திருவிழா போட்டிகளில் பங்குபெற்று மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு அவர்களின் கலைத்திறன்களை மேலும் மேம்படுத்துவதற்காக துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு புத்தொளி பயிற்சியாக ரூபாய் 70 இலட்சம் மதிப்பீட்டில் கலைச்சிற்பி என்ற தலைப்பில் சுமார் 400 மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படும்" என அறிவித்திருந்தார்.

மேற்கண்ட அறிவிப்பின்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக கலைத்திருவிழா போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களின் கலைத்திறன்களை மேலும் மேம்படுத்தும் விதமாகவும். அவர்களின் கலை ஆர்வத்தினை ஊக்குவிக்கும் விதமாகவும். அவர்கள் மென்மேலும் அவரவர்தம் கலை வடிவங்களில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கக்தில், அந்தந்த கலைப்பிரிவின் வல்லுநர்களைக் கொண்டு மாணவர்களுக்கான சிறப்பு புத்தொளி பயிற்சி முகாம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒவியம், சிற்பம், பரதநாட்டியம், நாட்டுப்புற & கிராமிய நடனம், வீதி நாடகம் மற்றும் பொம்மலாட்டம் ஆகிய கலை வடிவங்களில் 2022-23 ஆம் ஆண்டு முதல், மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 16.06.2025 முதல் 2106.2025 வரை 6 நாட்களுக்கு சிறப்பு புத்தொளி பயிற்சி முகாமினை வல்லுநர்களை கொண்டு சென்னையில் நடைபெற்று வருகிறது.

மாணவர்களுக்கு கலைத்திறமையை வளர்க்க வாய்ப்பு

இப்பயிலரங்கத்தில், கலைப்பிரிவு வாயாக பங்குபெற்றுகொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு பயிற்சியளிக்கும் அந்தந்த கலைவடிவம் சார்ந்த வல்லுநர்களின் விவரம் கீழ்காணும்மாறு வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தங்களுக்குள்ள தனிக் கலைத்திறனின் நுணுக்கத்தினை அக்கலையில் சிறந்து விளங்கும் வல்லுநர்களிடமிருந்து பெறும்போது அக்கலையில் சரியான வழியில் மென்மேலும் சிறந்து விளங்கி உயரிய இடத்தை அடைவதற்கு ஓர் நல்வாய்ப்பாக அமையும்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!