பெட்ரோல், டீசல் விலை குறைஞ்சிருச்சா…? இன்றைய ஆறுதல் அறிவிப்பு

By manimegalai aFirst Published Oct 26, 2021, 7:45 AM IST
Highlights

சென்னையில் பெட்ரோல், டீசல் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் இருக்கிறது.

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் இருக்கிறது.

கடந்த 3 வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் டாப் கியரில் இருக்கிறது. 100 ரூபாயை தாண்டி பெட்ரோல், டீசல் உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகளை அல்லாட வைத்திருக்கிறது. விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது.

நாட்டின் அனைத்து நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்துவிட்டது. இந் நிலையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரங்களை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதன் படி நேற்றைய விலையில் விற்கப்படுகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோல், ரூ.104.52 காசுக்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.100.59 ஆக இருக்கிறது. இந்த விலை அறிவிப்பு காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

click me!