இன்றே கடைசி நாள்..! மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைக்க..! கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுமா.?

By Ajmal KhanFirst Published Jan 31, 2023, 8:15 AM IST
Highlights

மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது இன்றோடு நிறைவடையவுள்ள நிலையில், சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆதார் எண் இணைப்பு

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையில் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் தமிழக மின் வாரியத்தால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து  மின் இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டது.  ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் முடியும் என அரசின் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து ஆதார் எண்ணை இணைக்க தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாமும் நடத்தப்பட்டது.

இபிஎஸ். ஓபிஎஸ், டிடிவி தினகரன்..இபிஎஸ் போட்ட பிளான் - ஈரோடு கிழக்கு அதிமு வேட்பாளர் யார் தெரியுமா.?

ஆதார் எண்ணை இணைக்காமல்33 லட்சம் பேர்

இந்தநிலையில் தற்போது வரை  குடிசை, கைத்தறி, விசைத்தறி , விவசாய இணைப்பு என 2 கோடியே 34 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் உடன் இணைக்கப்பட்டதாக தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது. இது மொத்தம் உள்ள 2 கோடியே 67 லட்சம் இணைப்புகளில் 87.44 சதவீதம் ஆகும். தற்போது வரை இன்னும் 33 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். ஏற்கனவே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க முதலில் டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர், கூடுதலாக ஒரு மாதம் வழங்கப்பட்ட நிலையில், அந்த அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதன்படி https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. 

கூடுதல் அவகாசம் வழங்கப்படுமா.?

தற்போது வரை 30  லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தங்களது மின இணைப்போடு ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். எனவே கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 15 நாட்கள் மட்டும் கூடுதலாக கால அவகாசம்  வழங்கப்படும் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

அமித்ஷாவின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றியதற்கு மகிழ்ச்சி..! ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த அண்ணாமலை

click me!