டிஎன்பிஎஸ்சி - யால் நிரப்பப்படவுள்ள மீன்வளத்துறை சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.கணினி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
நிறுவனம்: TNPSC
பணியின் பெயர்: Sub-Inspector of Fisheries
காலி பணியிடங்கள்: 24
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் அடுத்த மாதம் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் 16 முதல் 18 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
TNPSC யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு ( http://www.tnpsc.gov.in/) சென்று விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க:முதுகலை ஆசிரியர் பணிகளுக்கு நாளை நேரடி நியமன கலந்தாய்வு.. மையங்கள் விவரம் வெளியீடு..
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். பின்னர் இறுதி பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
தேர்வு நடைபெறும் தேதி:
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.35900 -ரூ1,13,500 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி வாரியத்தின் கீழ் மீன்வளத் தொழில்நுட்பத்தில் டிப்ளோ படித்திருக்க வேண்டும். அல்லது மீன்வளம் (அ) உயிரியல் முக்கிய பாடமாக கொண்ட அறிவியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டண விவரம்:
விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். அது போல் தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இட ஒதுக்கீட்டின் படி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.
மேலும் படிக்க:ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.. டவுன்லோட் செய்வது எப்படி ? முழு விபரம்