7 நிமிடங்களில் வரும் 108 ஆம்புலன்ஸ்..! தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த அன்புமணி

By Ajmal KhanFirst Published Oct 14, 2022, 12:57 PM IST
Highlights

கிராமப்பகுதிகளில் அவசர ஊர்தி வந்து சேரும் சராசரி நேரத்தை 10 நிமிடமாக குறைக்க வேண்டும். அதற்காக அவசர ஊர்திகளின் எண்ணிக்கையை  அதிகரிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசுக்கு பாராட்டு

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு பாராட்டு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட டுவிட்டவர் பதிவில், சென்னையில் 108 அவசர ஊர்திகள், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி நேரம் 7 நிமிடமாக குறைந்துள்ளது. அதாவது, ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் அவசர ஊர்தி சராசரியாக அடுத்த 7 நிமிடங்களில் நோயாளியை சென்றடைகிறது. இது பாராட்டத்தக்கது என தெரிவித்துள்ளார். நோயாளிகள், விபத்துகளில் சிக்கியவர்களின் உயிரைக்காக்க  உடனடி மருத்துவ சிகிச்சை  அவசியம். அதற்காகத்தான் எனது பதவிக்காலத்தில் 108சேவையை தொடங்கினேன். சென்னையில் அவசர ஊர்தி வந்து சேரும் நேரம் 8.40நிமிடத்திலிருந்து 7நிமிடமாக குறைக்கப்பட்டிருப்பதால் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் இளம் குற்றவாளிகள்..! அலார்ட் ஆன கோவை போலீஸ்..! இளைஞர்களை கவர புதிய திட்டம் அறிமுகம்

கிராமங்களில் அதிகரிக்க வேண்டும்

நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் 108 அவசர ஊர்திகளின் சேவையை விரைவுபடுத்த வேண்டியது அவசியம் ஆகும்.  கிராமங்களில் அவசர ஊர்தி வந்து சேரும் நேரம் சில இடங்களில் 10 நிமிடம் முதல் 30 நிமிடங்களாக (சராசரி 15 நிமிடங்கள்) உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  இது மேலும் குறைக்கப்பட வேண்டும் கிராமப்பகுதிகளில் அவசர ஊர்தி வந்து சேரும் சராசரி நேரத்தை 10 நிமிடமாக குறைக்க வேண்டும். அதற்காக அவசர ஊர்திகளின் எண்ணிக்கையை  அதிகரிக்க வேண்டும். அவசர ஊர்திகள் நிறுத்தி வைக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு அரசு முன்வர வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழக அரசின் மின் கட்டண உயர்வுக்கு தடையில்லை - பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்த உச்ச நீதிமன்றம்

click me!