தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு சட்டத்துறை அதிகாரியை 3 மாதத்துககுள் நியமனம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மின் கட்டண உயர்வு நடவடிக்கைக்கு தடைவிதிக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளது
மின் கட்டண் உயர்வுக்கு எதிர்ப்பு
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு தொடர்பாக முடிவு எடுக்க தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு நூற்பாலை சங்கங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டதற்கு பின்னர் தான் மின் கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி,மின்கட்டண உயர்வை அமல்படுத்த தடை விதித்து இருந்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் மின் கட்டணத்தை உயர்த்தவும் இது குறித்து முடிவெடுக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது
தொடரும் சோகம்.. அதிவேகத்தில் யானை மீது மோதிய ரயில்.. துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்
மின் கட்டண உயர்வு- உச்சநீதிமன்றத்தில் முறையீடு
இதை எதிர்த்து தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செயப்பட்டது. அந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆணையங்களுக்கு சட்டத்துறை அதிகாரிகளை நியமனம் செய்ய உத்தரரவிட்டிருந்ததே , அது அமல்படுத்தப்படவில்லையா ? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை அதிகாரியை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, 3 மாதத்துக்குள் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம்- தடை விதிக்க மறுப்பு
அப்போது நூற்பாலைகள் தரப்பில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை அதிகாரி நியமனம் செய்யப்படும் வரை மின் கட்டண உயர்வுக்கு தடைவிதிக்க வேண்டும் என கோரப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை அதிகாரியை 3 மாதத்துக்குள் நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் 3 மாத்தில் சட்டத்துறை அதிகாரியை அரசு நியமனம் செய்ய வில்லை என்றால் மீண்டும் இந்த நீதிமன்றம் முன் முறையிட மனுதாரருக்கு அனுமதியளிப்பதாவும் தெரிவித்தனர். அதேவேளையில், தமிழக அரசின் மின்கட்டண உயர்வு நடவடிக்கைக்கு தடைவிதிக்கவும் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்