ரயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மரணத்தில் திடீர் திருப்பம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

By vinoth kumar  |  First Published Oct 14, 2022, 11:37 AM IST

சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயில் தள்ளி கொல்லப்பட்ட மாணவியின், தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 


சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயில் தள்ளி கொல்லப்பட்ட மாணவியின், தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சென்னை ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் சத்யா(20). அதே பகுதியில் குடியிருப்பவர் சதீஷ்(23). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே சத்யா பள்ளியில் படிக்கும் போதே சத்யாவை பின் தொடர்ந்து வந்துள்ளார். நாளடைவில் சதீஷ் மற்றும் சத்யா ஆகிய இருவரின் நட்பு காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் விவகாரம் கத்யா வீட்டிற்கு தெரியவந்ததையடுத்து தனது மகளை தாய் கண்டித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ரயில் வரும் போது காலால் எட்டி உதைத்து கல்லூரி மாணவி கொலை.. பதுங்கி இருந்த கொடூர காதலன் கைது..!

undefined

அதன் பிறகு சத்யா தனது காதலன் சதீஷ் உடனான நட்பை துண்டித்துள்ளார். இதற்கிடையே சத்யாவுக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளனர். இந்த தகவல் காதலன் சதீசுக்கு தெரியவந்தது. உடனே சதீஷ் நேற்று வழக்கம் போல் சத்யா கல்லூரி செல்ல தனது தோழியுடன் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்ததும் பின் தொடர்ந்து நேரில் வந்து இதுதொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு சத்யா ஆமாம் என்று கூறி என்னை இனி  தொந்தரவு செய்யாதே. தொந்தரவு செய்தால் என் அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ரயில் தாம்பரத்தில் இருந்து பரங்கிமலை நோக்கி ரயில் வந்து கொண்டிருந்த போது சத்யாவும், அவரது தோழியும் ரயிலில் ஏறி செல்வதற்காக தயாராக இருந்தனர். ஆத்திரத்தில் இருந்த சதீஷ், சத்யாவை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டுள்ளார். இதில், சத்யா தண்டவாளத்தில் விழுந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காதலியை கொலை செய்து தலைமறைவாக இருந்து வந்த காதலனை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்தார். 

இதனிடையே, மகள் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் தந்தை மாணிக்கம் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. விஷம் கலந்த மதுவைக் குடித்ததால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு, அதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது உயிரிழந்துள்ளார் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  கடவுளே இது மாதிரி யாருக்கும் நடக்க கூடாது.. மகள் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் தந்தை மாரடைப்பால் மரணம்.!

click me!