தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதிய இத்தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி உள்ளது. இந்த முறை கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு இருக்கும் என்பது குறித்தும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்பட்டு வருகின்றன. அரசுப் பணியிடங்களுக்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில் கடந்த ஜூன் 9-ம் தேதி குரூப் 4 தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தியது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6624 குரூப் 4 காலியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடைபெற்றது.
அதன்படி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளார்க் என பல பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வு தாள்களை திருத்தும் பணி இந்த மாதம் தொடங்கியது. எனினும் விடைத்தாளை திருத்தும் பணி முடிவடைய இன்னும் 6 மாதம் ஆகும் என்று கூறப்படுகிறது.
undefined
எனவே இந்த தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஜனவரி மாதம் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது இந்த வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குரூப் 4 தேர்வுகளை பொறுத்த வரை நேர்முகத்தேர்வு இல்லை. இந்த எழுத்து தேர்வில் உரிய கட் ஆஃப் மதிப்பெண்ணை பெற்றால் ஆவண சரிபார்ப்புக்கு பின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படும்.
எனினும் இந்த தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணை டிஎன்பிஎஸ்சி இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் இந்த முறை ஆண் தேர்வாளர்களுக்கான கட் ஆஃப் மார்க் 146-151 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொதுப்பிரிவில் பெண் தேர்வாளர்களுக்கான கட் ஆஃப் மார்க் 152 முதல் 155 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.